முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

சென்னை விமான நிலைய கூரை மீண்டும் இடிந்து விழுந்தது

வியாழக்கிழமை, 3 அக்டோபர் 2013      தமிழகம்
Image Unavailable

 

சென்னை அக்.4 - சென்னை மீனம்பாக்கம் விமான நிலையத்தில் பயணிகளின் வசதிக்காக நவீன வசதிகளுடன் கூடிய உள்நாட்டு மற்றும் பன்னாட்டு முனையங்கள் ரூ.2 ஆயிரத்து 15 கோடி செலவில் கட்டப்பட்டது. இதை துணை ஜனாதிபதி ஹமீது அன்சாரி கடந்த ஜனவரி மாதம் திறந்துவைத்தார்.

இந்த கட்டிடத்தில் உள்நாட்டு முனையம் கடந்த மார்ச் மாதம் முதல் செயல்பட்டு வருகிறது. மேல் தளத்தில் புறப்பாடு பகுதியும், கீழ் தளத்தில் வருகை பகுதியும் செயல்படுகிறது. உள்நாட்டு முனையத்தின் புதிய புறப்பாடு பகுதியில் நேற்று மாலை மதுரை, பெங்கள?ர், ஐதரபாத் ஆகிய நகரங்களுக்கு செல்ல பயணிகள் போர்டிங் பாஸ் வாங்க காத்திருந்தனர்.

அப்போது பயங்கர சத்ததுடன் மேற்கூரை திடீரென இடிந்து விழுந்தது. இதை கண்ட பயணிகள் அலறியடித்துக்கொண்டு ஓடினார்கள். உடனே பாதுகாப்பு ஊழியர்களும், விமான நிலைய பணியாளர்களும் அதிர்ச்சியுடன் ஒடி வந்து பார்த்தனர்.

பின்னர் மேற்கூரை சரிந்து விழுந்த பகுதி மட்டும் துண்டித்து அகற்றப்பட்டது. இந்த விபத்தில் பயணிகள் யாருக்கும் எந்த வித பாதிப்பும் ஏற்படவில்லை. அந்த பகுதியில் சுமார் 20 நிமிடங்கள் பயணிகளுக்கு போர்டிங் பாஸ் வழங்கும் பணி நிறுத்தப்பட்டது.

கடந்த 2 மாதங்களில் 5 முறை மேற்கூரை இடிந்து விழுந்து உள்ளது. நேற்று 6_வது முறையாக பெயர்ந்து விழுந்தது. விமான நிலைய கட்டிட பணிக்கு பயன்படுத்தப்பட்ட பொருட்கள் தரமானவையா? என்பதை ஆய்வு செய்ய வேண்டும் என்றும், புதிய முனையங்களில் தொடர்ந்து மேற்கூரை இடிந்து விழுவதால் அதை தடுக்க உரிய நடவடிக்கை வேண்டும் என்றும் பயணிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்