முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

எகிப்தில் நீடிக்கும் கலவரம்: 50 பேர் சாவு

செவ்வாய்க்கிழமை, 8 அக்டோபர் 2013      உலகம்
Image Unavailable

 

கெய்ரோ, அக். 9 - எகிப்தில் போர் நினைவு நாள் நிகழ்ச்சியின் போது போலீசாருக்கும், அதிபர் பதவியில் இருந்து அகற்றப்பட்ட முகமது மோர்ஸி ஆதரவாளர்களுக்கும் இடையே நேரிட்ட மோதலில் 50 பேர் கொல்லப்பட்டனர். 

எகிப்தில் உள்ள கெய்ரோ மத்திய சதுக்கத்தில் 1973 ம் ஆண்டு நடைபெற்ற அரசு இஸ்ரேலி போர் நினைவு தின நிகழ்ச்சி நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் எகிப்து தேசிய கொடி மற்றும் எகிப்தின் ராணுவ தளபதி அப்துல் பத்தாக் அல் சிசியின் பதாகையை ஏந்தியவாறு கலந்து கொண்டனர். அதே நேரத்தில் கூட்டமாக சேர்ந்து பேரணி நடத்த முயன்ற மோர்ஸி ஆதரவாளர்களுக்கும், ராணுவ ஆதரவாளர்களுக்கும் இடையே மோதல் மூண்டது. இந்த கலவரத்தில் 45 பேர் கொல்லப்பட்டனர். இதை தொடர்ந்து எகிப்தின் தெற்கு பகுதியில் நடைபெற்ற கலவரத்தில் 5 பேர் கொல்லப்பட்டனர். இரு சம்பவங்களிலுமாக 260 க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர். இதையடுத்து போலீசார் துப்பாக்கி சூடு மற்றும் கண்ணீர்ப் புகை குண்டுகளை வீசி கலவரக்காரர்களை கலைத்தனர். இது குறித்து எகிப்து சுகாதாரத் துறை உயரதிகாரி அகமது அல் அன்சாரி கூறுகையில், இந்த கலவரத்தில் பெரும்பாலானோர் துப்பாக்கி சூட்டில் உயிரிழந்துள்ளனர். ஆகஸ்ட் முதல் நிகழ்ந்து வரும் கலவரத்தில் இதுவரை ஆயிரம் பேர் கொல்லப்பட்டுள்ளனர் என்று அவர் தெரிவித்தார். இதனிடையே ஜூஸ்கநால் பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்த போது ராணுவ வீரர்கள் மீது மர்ம நபர் ஒருவர் நிகழ்த்திய துப்பாக்கி சூட்டில் 5 ராணுவ வீரர்கள் கொல்லப்பட்டனர். 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

சர்க்கரை நோயினால் ஏற்படும் எரிச்சல், பாத எரிச்சல் - கை கால் எரிச்சல் குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் கட்டிகள் கரைய, குணமாக, அடிபட்ட வீக்கம், காயங்களுக்கு, நரம்பு சிலந்தி, சிலந்தி புண், வீக்கம் ஆற சித்த மருத்துவ குறிப்புக்கள் மஞ்சள் காமாலை குணமாக | கல்லிரல் குறைபாடு நீங்க | இரத்தம் தூய்மையாக | பாண்டு தீர - சித்த மருத்துவ குறிப்புக்கள்
பித்த நோய்கள் குணமாக | பித்த மயக்கம் தீர | பித்த நீர் மலத்துடன் வெளியேற | உடல் உஷ்ணத்தை தணிக்க | கல்லடைப்பு முகப்பரு குணமாக | தழும்புகள், கரும்புள்ளி, பாலுண்ணி நீங்க | மருவு கரப்பான் பிளவை தீர சித்த மருத்துவ குறிப்புக்கள் மூட்டு வலி குணமாக | Natural Home Remedy for Knee & Hip Joint Pain | Arthritis