முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

சிங்கப்பூர் மாடல் அழகி பாகிஸ்தானில் படுகொலை

புதன்கிழமை, 16 அக்டோபர் 2013      உலகம்
Image Unavailable

 

இஸ்லாமாபாத், அக்.17 - சிங்கப்பூர் மாடல் அழகி ஒருவர் பாகிஸ்தானில் கடத்தி படுகொலை செய்யப்பட்டார். அவரது சடலம் ஏரியில் வீசப்பட்டது. பாகிஸ்தானில் கராச்சியை சேர்ந்தவர் பெமினா சவுத்ரி. இவர் பல நாடுகளில் நடைபெற்ற அழகிப் போட்டியில் பங்கேற்றுள்ளார். 

சிங்கப்பூர் மாடல் அழகியாக இவர் தேர்ந்தெடுக்கப்பட்டார். இவருக்கு மகன், மகள் உள்ளனர். இவரது தாயார் நஷிபா தஹ்தீன் கராச்சியில் வசித்து வருகிறார். தனது தாயாரைப் பார்ப்பதற்காக பெமினா அடிக்கடி பாகிஸ்தான் செல்வார். பாகிஸ்தானில் பேஷன் பள்ளி துவக்க விரும்பிய. பெமினா பள்ளியை துவக்குவதற்கான நிலம் வாங்க கடந்த 10_ம  தேதி இஸ்லா"மாபாத் சென்றார். அதற்குப் பிறகு அவர் வீடு திரும்பவில்லை. இதற்கிடையே தான் கடத்தப்பட்டதாக தனது தாயாருக்கு அவர் எஸ்.எம்.எஸ். அனுப்பியுள்ளார். இதையடுத்து அவரது தாயார் இஸ்லாமாபாத் போலீஸில் புகார் கொடுத்தார். போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தினர். இதுதொடர்பாக நில புரோக்கர் ஒருவரை போலீஸார் கைது செய்தனர். அவரிடம் நடத்திய விசாரணையில் பெமினாவை கொலை செய்து அவரது சடலத்தை  ஏரியில் வீசியதாக புரோக்கர் தெரிவித்தார். பின்னர் பெமினாவின் சடலத்தை போலீஸார் மீட்டனர். 

 

 

  

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

சர்க்கரை நோயினால் ஏற்படும் எரிச்சல், பாத எரிச்சல் - கை கால் எரிச்சல் குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் கட்டிகள் கரைய, குணமாக, அடிபட்ட வீக்கம், காயங்களுக்கு, நரம்பு சிலந்தி, சிலந்தி புண், வீக்கம் ஆற சித்த மருத்துவ குறிப்புக்கள் மஞ்சள் காமாலை குணமாக | கல்லிரல் குறைபாடு நீங்க | இரத்தம் தூய்மையாக | பாண்டு தீர - சித்த மருத்துவ குறிப்புக்கள்
பித்த நோய்கள் குணமாக | பித்த மயக்கம் தீர | பித்த நீர் மலத்துடன் வெளியேற | உடல் உஷ்ணத்தை தணிக்க | கல்லடைப்பு முகப்பரு குணமாக | தழும்புகள், கரும்புள்ளி, பாலுண்ணி நீங்க | மருவு கரப்பான் பிளவை தீர சித்த மருத்துவ குறிப்புக்கள் மூட்டு வலி குணமாக | Natural Home Remedy for Knee & Hip Joint Pain | Arthritis