முக்கிய செய்திகள்

பிரச்சினைகளுக்கு தீவிரவாதம் தீர்வாகாது - பிரதமர் பேச்சு

ஞாயிற்றுக்கிழமை, 15 மே 2011      இந்தியா
Manmohan

 

காபூல்,மே.15 - மக்கள் சந்திக்கும் எந்தவொரு பிரச்சினைக்கும் பயங்கரவாதம், தீவிரவாதம் ஒரு போதும் தீர்வாகாது என்று பிரதமர் மன்மோகன்சிங் தெரிவித்தார். ஆப்கானிஸ்தானுக்கு 2 நாள் அரசு முறை பயணமாக சென்றிருந்த பிரதமர் மன்மோகன்சிங் அந்நாட்டு நாடாளுமன்றத்தில் உரை நிகழ்த்தினார். அப்போது அவர் பேசியதாவது, 

இந்த பிராந்தியத்தில் பயங்கரவாதம், தீவிரவாதம் போன்ற செயல்களால் அமைதி குலைந்துள்ளது. மக்களால் சுதந்திரமாகவும், நிம்மதியாகவும் வாழ முடியவில்லை. எந்த ஒரு பிராந்தியத்தின் வளர்ச்சிக்கும் அமைதியும், கவனமின்மையும் அவசியம். இருப்பினும் ஆப்கானிஸ்தான் மக்கள் எத்தனையே தடைகளை தகர்த்தெறிந்து நாட்டை வளர்ச்சி பாதையில் அழைத்து செல்ல கடுமையாக போராடி வெற்றியும் பெற்றுள்ளனர். ஆப்கான் மக்களின் இந்த தியாகத்தை நினைத்து இந்தியா பெருமைப்படுகிறது. 

ஆப்கான், இந்தியா உறவு நீண்ட கால பாரம்பரிய உறவு. இதை பேணி காத்து முன்னெடுத்து செல்வதில் இரு நாடுகளுமே அக்கறையாக இருந்து வருகின்றன. பயங்கரவாதத்தால் சீர்குலைந்துள்ள ஆப்கானிஸ்தானின் உள்கட்டமைப்பை மறு சீரமைக்கும் பணி துரிதமாக நடந்து வருகிறது. இதற்கு இந்தியா ஆரம்பத்தில் இருந்தே தன்னால் முடிந்த உதவிகளை செய்து உறுதுணையாக இருந்து வருகிறது என்றார்.

இதை ஷேர் செய்திடுங்கள்: