முக்கிய செய்திகள்

பாகிஸ்தானுக்கு பொருளாதார உதவிகளை நிறுத்த கோரிக்கை

ஞாயிற்றுக்கிழமை, 15 மே 2011      உலகம்
World nations

 

இஸ்லாமாபாத், மே.15 - தீவிரவாதத்திற்கு ஆதரவாக செயல்பட்டு வரும் பாகிஸ்தானுக்கு பொருளாதார உதவிகளை நிறுத்தவேண்டும் என்று உலக நாடுகள் கேட்டுக்கொண்டுள்ளன. சர்வதேச பயங்கரவாதியான ஒசாமா பின்லேடன் கடந்த 2ம் தேதியன்று அமெரிக்க அதிரடிப்படையினரால் சுட்டுக்கொல்லப்பட்டார். பின்லேடன் பாகிஸ்தானில் தங்கியிருந்தது அந்நாட்டு உளவுபடைக்கு தெரியுமா என்ற சந்தேகம் உலகமக்களிடையே இருந்து வந்த சந்தேகத்தை நிவிர்த்தி செய்வதற்கு பதிலாக பாகிஸ்தான் தலைவர்கள் அமெரிக்கா எதிர்ப்பு உணர்வுகளை பரப்பி வருகின்றனர். இன்னும் பல தீவிரவாதிகள் பதுங்கியுள்ள நிலையில் அவர்களை பிடிப்பதில் தீவிரம் காட்டாத பாகிஸ்தான் அரசு அமெரிக்காவின் தாக்குதலை மட்டும் கண்டித்தது. பின்லேடன் சுட்டுக்கொல்லப்பட்டதால் பாகிஸ்தான் அரசும் அந்நாட்டில் உள்ள அணுஉலைகளும் தீவிரவாத அச்சுறுத்தலுக்கு ஆளாகி உள்ளது. இதனை அமெரிக்கா உதவியின்றி பாகிஸ்தான் முறியடிப்பது கஷ்டம் என்று பல்வேறு நாட்டின் அரசியல் நிபுணர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.

பாகிஸ்தான் ஒரு தீவிரவாத ஆதரவு நாடு. எனவே பாகிஸ்தானுக்கு அளித்து வரும் ராணுவம் மற்றும் பொருளாதார உதவிகளை அமெரிக்கா நிறுத்தி கொள்ளவேண்டும். இது தீவிரவாதத்திற்கு ஆதரவாக செயல்படும் பாகிஸ்தானுக்கு அமெரிக்கா தரும் பதிலடியாக இருக்கும் என்று அரசியல் வல்லுனர்கள் கருத்து தெரிவித்துள்ளனர். இதற்கியைடே நடந்த பாராளுமன்ற கூட்டத்தில் அமெரிக்கா தாக்குதலுக்கு கண்டனம் தெரிவித்து தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

இதை ஷேர் செய்திடுங்கள்: