எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
புதுடெல்லி. மே.- 18 - எத்தியோப்பியா, தான்சானியா ஆகிய நாடுகளில் அரசு முறை பயணம் மேற்கொள்ள வருகிற 23 ம் தேதி புறப்பட்டு செல்கிறார்.
அடிஸ் அபாபா நகரில் ஆப்பிரிக்க யூனியன் உச்சி மாநாடு நடைபெற உள்ளது. இதில் ஆப்பிரிக்க யூனியனில் அங்கம் வகிக்கும் நாடுகளின் தலைவர்களும் இந்திய பிரதமர் மன்மோகன் சிங்கும் கலந்து கொள்கிறார்கள்.
இந்த உச்சி மாநாட்டில் பங்கேற்பதற்காக பிரதமர் மன்மோகன் சிங் வருகிற 23 ம் தேதி டெல்லியிருந்து தனி விமானம் மூலம் அடிஸ் அபாபா நகருக்கு புறப்பட்டு செல்கிறார்.
பிரதமரின் இந்த சுற்றுப்பயணம் குறித்து வெளியுறவுத்துறை செயலாளர் ( மேற்கு நாடுகள் ) விவேக் கட்ஜூ செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார்.
அப்போது அவர் கூறுகையில் வருகிற 23 ம் தேதி பிரதமர் மன்மோகன் சிங் எத்தியோப்பியா, தான்சானியா ஆகிய நாடுகளில் சுற்றுப்பயணம் மேற்கொள்வார் என்றும் அவருடன் உயர் மட்யடக்குழு ஒன்றும் செல்லும் என்றும் தெரிவித்தார்.
மே 23 ம் தேதி முதல் 26 ம் தேதி வரை மன்மோகன் சிங் எத்தியோப்பாவில் இருப்பார்.
எத்தியோப்பியாவுக்கு கடந்த 20 ஆண்டுகளில் இப்படி ஒரு உயர் மட்டக்குழு பயணம் செய்வது இதுவே முதல் முறையாகும் என்றும் அவர் தெரிவித்தார்.
எத்தியோப்பிய தலைநகர் அடிஸ் அபாபாவில் 24 மற்றும் 25 தேதிகளில் நடக்கும் ஆப்பிரிக்க யூனியன் - இந்திய உச்சி மாநாட்டில் பங்கேற்பார்.
இரு நாட்டு உறவுகள் குறித்து எத்தியோப்பிய தலைவர்களுடன் மன்மோகன் சிங் பேச்சு நடத்துவார்.
அதன் பிறகு 28 ம் தேதி தான்சானியா செல்லும் பிரதமர் மன்மோகன் சிங் அங்கு 28 ம் தேதி வரை தங்கி பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்பார்.
பிரதமரின் இந்த சுற்றுப்பயணத்தில் அவரது துணைவியார் குருசரண் கவுரும் உயர் மட்டக்குழுவினரும் உடன் செல்வார்கள் என்றும் அவர் கூறினார்.
உயர் மட்டக்குழுவில் மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் எஸ்.எம்.கிருஷ்ணா,பிரதமரின் முதன்மை செயலாளர் கே. ஏ. நாயர், தேசிய பாதுகாப்பு ஆலோசகர் சிவசங்கர் மேனன் ஆகியோரும் இடம் பெறுவார்கள்.
எத்தியோப்பிய பிரதமர் மெலஸ் ஜெனாவியுடன் பேச்சு நடத்தும் மன்மோகன் சிங் எத்தியோப்பிய பாரளுமன்றத்திலும் உரை நிகழ்த்துவார்.
எத்தியோப்பிய வெளியுறவுத்துறை அமைச்சருடன் மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் கிருஷ்ணா பேச்உச நடத்துவார்.
தான் சானியாவில் அந்நாட்டு தலைவர்களை சந்தித்து இரு நாட்டு உறவுகள் குறித்து பேச்ச நடத்தும் மன்மோகன் சிங் 29 ம் தேதி தாயகம் திரும்புவார்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்1 year 5 months ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்1 year 5 months ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.1 year 6 months ago |


