முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

மயில்சாமிக்கு மிரட்டல் விடுத்த பெண்ணிடம் விசாரணை

செவ்வாய்க்கிழமை, 10 டிசம்பர் 2013      சினிமா
Image Unavailable

 

சென்னை, டிச.11 -  பிரபல காமெடி நடிகர் மயில்சாமிக்கு மிரட்டல் விடுத்த பெண்ணிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். சென்னை விருகம்பாக்கம் வெங்கடேஸ்வரா நகரில் வசித்து வருபவர் பிரபல காமெடி நடிகர் மயில்சாமி. 

இவருக்கு கடந்த ஞாயிற்றுகிழமையன்று இரவு 9.15 மணியளவில் மர்ம போன் ஒன்று வந்தது. அதில் பேசியவர்'எங்களுக்கு 50 ஆயிரம் ரூபாய் தேவைப்படுகிறது. பணத்தை கொடுக்க மறுத்தால் உங்களது ரகசியங்களை வெளியில் கூறிவிடுவோம்' என்று கூறி போனை துண்டித்தார்.

 இதைதொடர்ந்து விருகம்பாக்கம் போலீசில் மயில்சாமி புகார் அளித்தன் பேரில் இன்ஸ்பெக்டர் கோபால் குரு வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார். முதற்கட்டமாக அந்த போன் நபர் யாருடையது? எங்கிருந்து தொடர்பு கொண்டார்? என்ற கோணத்தில்  போலீசார் விசாரணை மேற்கொண்டனர். இதில், அதே பகுதியை சேர்ந்த ஆயிஷா (வயது 35) என்பவரின் போன் நம்பர் என  தெரிய வந்தது. இதை தொடர்ந்து அவரை பிடித்து போலீசார்  விசாரணை நடத்தி வருகின்றனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 1 week 5 hours ago பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 month 3 days ago தொடர் தும்மல் நிற்க | ஜலதோஷம் நீங்க | நீர் கோர்வை குணமாக | சுவாசக்குழாய் அலர்ஜி 1 month 3 days ago
மாரடைப்பை தடுக்க | நெஞ்சுவலி குணமாக | இதயம் படபடப்பு நீங்க | இருதயம் பலமடைய 1 month 4 weeks ago இருமல் குணமாக | இளைப்பு குணமாக | வரட்டு இருமல் | கக்குவான் இருமல் வேகம் குறைய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 month 4 weeks ago இரத்தத்தை சுத்தம் செய்து சுறுசுறுப்பாக்க - சித்த மருத்துவ குறிப்புக்கள் | இரத்தம் சுத்தமாக | ரத்த சோகை | புதிய ரத்தம் உருவாக | இரத்தத்தை சுத்தப்படுத்த 1 month 4 weeks ago