முக்கிய செய்திகள்

தீவிரவாதிகள் பட்டியலில் இருந்து காமர் கான் நீக்கம்

புதன்கிழமை, 18 மே 2011      உலகம்
kamar-khan psd

புதுடெல்லி,மே.19 - பாகிஸ்தானுக்கு இந்தியா அனுப்பியுள்ள தீவிரவாதிகள் பட்டியலில் இருந்து வாகுல் காமர் கான் நீக்கப்பட்டுள்ளார். இந்த நடவடிக்கையை சி.பி.ஐ. எடுத்துள்ளது.

இந்தியாவில் நாசவேலையில் ஈடுபட்டுவிட்டு பாகிஸ்தானுக்கு ஏராளமான தீவிரவாதிகள் தப்பியோடிவிட்டனர். அவர்களுக்கு வேண்டிய வசதிகளை பாகிஸ்தான் அரசு செய்து கொடுக்கிறது. தப்பியோடிய 50 முக்கிய தீவிரவாதிகள் பெயர்கள் அடங்கிய பட்டியல் ஒன்றை பாகிஸ்தானுக்கு மத்திய உள்துறை அமைச்சகம் அனுப்பியது. மேலும் அந்த 50 தீவிரவாதிகளையும் இந்தியாவுக்கு அனுப்புமாறும் கேட்டுக்கொண்டது. 

இந்தநிலையில் அந்த 50 தீவிரவாதிகள் பெயர்கள் அடங்கிய பட்டியலில் வாகுல் காமர் கான், மகாராஷ்டிரா மாநிலம் தானே அருகே தன் அம்மாவுடன் வசிப்பது தெரியவந்தது. அவனை போலீசார் கைது செய்துள்ளனர். ஆனால் இந்த விபரத்தை சி.பி.ஐ.க்கு மும்பை புலனாய்வு போலீசார் தெரிவிக்காததால் கான் பெயரையும் சி.பி.ஐ. தெரியாமல் சேர்த்துவிட்டது. இப்போது வாகுல் கைது செய்யப்பட்டிருப்பதால் அவனுடைய பெயரை சி.பி.ஐ. நீக்கிவிட்டது. மும்பை போலீசார் அனுமதி பெறாமலேயே இந்த நடவடிக்கையை சி.பி.ஐ. எடுத்துள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்: