முக்கிய செய்திகள்

செக்ஸ் புகார் - ஐ.எம்.எப். நிர்வாக இயக்குனர் ராஜினாமா

வெள்ளிக்கிழமை, 20 மே 2011      உலகம்
Dominique Strauss1

வாஷிங்டன்,மே.20 - செக்ஸ் குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ள சர்வதேச நிதியுதவி ஸ்தாபன நிர்வாக இயக்குனர் டொமினிக் ஸ்ட்ராஸ் கான் ராஜினாமா செய்துவிட்டார். சர்வதேச நிதியுதவி ஸ்தாபனத்தின் நிர்வாக இயக்குனராக இருப்பவர் டொமனிக். இவர் பிரான்ஸ் நாட்டில் உள்ள ஒரு ஸ்டார் ஓட்டலில் தங்கியிருந்தபோது ஒரு பணிப்பெண்ணிடம் செக்ஸ் வைத்துக்கொள்ள கட்டாயப்படுத்தினாராம். இதனையொட்டி அந்த பெண் புகார் கொடுத்ததையொட்டி டொமினிக் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். செக்ஸ் குற்றச்சாட்டுக்கு ஆளான டொமினிக், நிர்வாக இயக்குனர் பதவியில் இருந்து ராஜினாமா செய்ய வேண்டும் என்ற கோரிக்கையும் எழுந்தது. இந்தநிலையில் நிர்வாக இயக்குனர் பதவியை டொமனிக் நேற்று ராஜினாமா செய்துவிட்டார். ராஜினாமா கடிதத்தை சர்வதேச நிதியுதவி ஸ்தாபன நிர்வாக வாரியத்திற்கு அனுப்பிவிட்டார். அந்த கடிதத்தில் நான் ஒரு அப்பாவி என்றும், குற்றமற்றவன் என்றும் கூறியுள்ளார். இந்த செக்ஸ் குற்றச்சாட்டால் மிகுந்த துயரத்திற்கு ஆளாகியுள்ளேன். அந்த துயரத்தில் இந்த ராஜினாமா கடிதத்தை அனுப்பியுள்ளேன் என்று டொமனிக் உருக்கமாக கூறியுள்ளார்.

இதை ஷேர் செய்திடுங்கள்: