முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

கார் விபத்து: அமைச்சர் வைத்திலிங்கம் உயிர் தப்பினார்

ஞாயிற்றுக்கிழமை, 15 டிசம்பர் 2013      தமிழகம்
Image Unavailable

 

தம்மம்பட்டி, டிச.16 - சேலம் மாவட்டம், தம்மம்பட்டி அருகே மாநில வீட்டு வசதித் துறை அமைச்சர் ஆர்.வைத்திலிங்கம் சென்ற கார் கவிழ்ந்தது. இதில் அமைச்சருக்கு லேசான காயங்கள் ஏற்பட்டது. வாழப்பாடியில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் பங்கேற்க அமைச்சர் ஆர்.வைத்திலிங்கம் தஞ்சாவூரிலிருந்து உதவியாளர், அ.தி.மு.க.வினர் 5 பேருடன் காரில் புறப்பட்டார். தம்மம்பட்டியை அடுத்துள்ள கந்தசாமிபுதூர் பகுதியிலுள்ள வளைவில் கார் திரும்பிய போது, ஓட்டுநரின் கட்டுபாட்டை இழந்து கவிழ்ந்து விப்த்துக்குள்ளானது. தகவலிறிந்த அந்தப் பகுதி மக்கள் விரைந்து சென்று அமைச்சர் உள்ளிட்ட 6 பேரையும் மீட்டன்ர். அமைச்சர் வைத்திலிங்கத்துக்கு கை, காலில் லேசான காயங்கள்  ஏற்பட்டது. பின்னர், வேறொரு காரில் வாழப்பாடிக்கு அமைச்சர் புறப்பட்டுச் சென்றனர். விபத்து குறித்து மல்லியகரை போலீஸார் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony