முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

காற்று சுத்திகரிப்பானுக்கு அதிக ஜி.எஸ்.டி. வரி விதிக்கலாமா...? டெல்லி உயர் நீதிமன்றம் காட்டம்

வியாழக்கிழமை, 25 டிசம்பர் 2025      இந்தியா
Delhi-High-Court 2023 04 12

புதுடெல்லி, ஒவ்வொரு குடிமகனுக்கும் சுத்தமான காற்று தேவை. அதற்கான குறைந்தபட்ச நடவடிக்கையாக அரசு காற்று சுத்திகரிப்பான்களை வழங்கலாம் என்று டெல்லி ஐகோர்ட் கூறியது.

டெல்லியில் அதிகரிக்கும் காற்று மாசு தொடர்பான வழக்கில், டெல்லி உயர் நீதிமன்ற நீதிபதிகள் தெரிவிக்கையில், "டெல்லியில் அதிகரிக்கும் காற்று மாசுபாட்டை கட்டுப்படுத்த தவறிய மத்திய பா.ஜ.க. அரசு, காற்று சுத்திகரிப்பான்களுக்கு 18 சதவீதம் ஜி.எஸ்.டி. விதிப்பதற்கு தார்மீக உரிமை இல்லை. டெல்லி நகரில் காற்று சுத்திகரிப்பான்களை ஆடம்பரப் பொருட்களாகக் கருத முடியாது. சுத்தமான காற்று அவசியம், மத்திய அரசால் அதனை உறுதிப்படுத்த முடியவில்லை என்பது வேதனை.

நச்சுக் காற்றில் இருந்து அடிப்படைப் பாதுகாப்புகூட இல்லாமல் குடிமக்கள் தவிக்கவிடப்பட்டுள்ளனர். பள்ளிகளை மூடுவது போன்ற நடவடிக்கைகள் தற்காலிக ஏற்பாடுகள் மட்டுமே, இவை நிரந்தரத் தீர்வுகள் அல்ல. காற்று மாசுவை தடுக்க நீண்ட காலத் தீர்வுகள் குறித்து மத்திய  அரசு விரிவான திட்டங்களை உருவாக்க வேண்டும்” என்று உத்தரவிட்டனர். மேலும், அதனைத்தொடர்ந்து, இவ்விவகாரத்தில் விரைவில் ஜி.எஸ்.டி. கவுன்சிலைக் கூட்டி முடிவெடுக்க அறிவுறுத்தியதுடன் மத்திய அரசிடம் மனு விவகாரத்தில் விளக்கமளிக்க உத்தரவிட்டு வழக்கு 26-ஆம் தேதிக்கு ஒத்தி வைக்கப்பட்டது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 6 months ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 6 months ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 7 months ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 7 months ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 9 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 9 months ago
View all comments

வாசகர் கருத்து