முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

தலாய் லாமாவுக்கு வாசல் திறந்தே இருக்கிறது: சீனா

வெள்ளிக்கிழமை, 20 மே 2011      உலகம்
Image Unavailable

பெய்ஜிங்,மே.20 - தலாய்லாமாவுக்கு வாசல் திறந்தே இருக்கிறது. அவர் எப்போதும் நாடு திரும்பலாம் என்று சீனா தெரிவித்துள்ளது. திபெத் நாட்டை சேர்ந்த தலாய் லாமா ஆன்மீக தலைவராவார். இவர் புத்தமத தலைவராகவும் இருக்கிறார். திபெத் நாட்டிற்கு சுயாட்சி வேண்டும் என்று போராடி வருகிறார். ஆனால் திபெத்தை ஆக்கிரமிப்பு செய்துள்ள சீனா அதற்கு மறுத்து வருகிறது. தலாய் லாமாவை கைது செய்யவும் முயற்சி செய்தது. அதிலிருந்து தப்பித்த தலாய்லாமா இந்தியாவில் தஞ்சம் புகுந்தார். அவரை ஒப்படைக்கக்கோரி சீனா எவ்வளவோ கேட்டுக்கொண்டது. இதற்கு சர்வதேச விதிமுறை இடம்கொடுக்கவில்லை என்று இந்தியா கூறிவிட்டதோடு தலாய்லாமா இந்தியாவின் விருந்தாளி என்று தெரிவித்துவிட்டது. சீனாவால் வாய் எதுவும் திறக்க முடியவில்லை. இதற்கிடையில் திபெத் அரசின் புதிய பிரதமர் தேர்ந்தெடுக்கப்பட்டார். அதாவது திபெத் நாட்டிற்கே வெளியே இந்த அரசு செயல்படும். திபெத்தில் சீனா சர்வாதிகார ஆட்சி செய்து வருவதே இதற்கு காரணமாகும். இந்த நிலையில் தலாய் லாமாவுக்கு வாசல் திறந்தே இருக்கிறது. அவர் எப்போதும் நாடு திரும்பலாம். ஆனால் திபெத்திற்கு சுயாட்சி கோரிக்கையை கைவிட வேண்டும் என்று சீனா நிபந்தனை விதித்துள்ளது. இந்தியாவில் செயல்பட்டு வரும் திபெத் அரசுடனும் தலாய் லாமா தொடர்பு வைத்துக்கொள்ளக்கூடாது. சீனாவின் கொள்கை வெளிப்படையாக தெரிவிக்கப்பட்டுவிட்டது. இனி முடிவு எடுப்பது தலாய்லாமா கையில்தான் இருக்கிறது என்று திபெத் சுயாட்சி பிராந்திய தலைவர் பத்மா சோலிங் நேற்று பெய்ஜிங் நகரில் நிருபர்களுக்கு பேட்டி அளிக்கையில் தெரிவித்தார். இந்த மாதிரி தலாய்லாமா நாடு திரும்ப வேண்டும் என்று சீன உயரதிகாரி ஒருவர் கூறுவது ரொம்பவும் அரிதாகும் என்பது குறிப்பிடத்தக்கது. 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!