முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

கென்யாவில் பஸ் மீது தீவிரவாதிகள் தாக்குதல்: 5 பேர் பலி

ஞாயிற்றுக்கிழமை, 15 டிசம்பர் 2013      உலகம்
Image Unavailable

 

நைரோபி, டிச. 16 - கென்யாவில் பஸ் மீது தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் 5 பேர் பலியானார்கள். இது பற்றிய விபரம் வருமாறு _ 

ஆப்பிரிக்க நாடான கென்யாவில் அல்கொய்தா உள்ளிட்ட தீவிரவாதிகள் அரசுக்கு எதிராக வன்முறை செயல்களில் ஈடுபட்டு வருகின்றனர். 

இந்த நிலையில், தலைநகர் நைரோபி புறநகரின் ஈஸ்ட்லே பகுதியில் உள்ள பங்கானி என்ற இடத்தில் ஒரு பயணிகள் பஸ் மீது வெடிகுண்டு தாக்குதல் நடத்தினார்கள். 

அதில் அந்த பஸ் நொறுங்கி தீப்பிடித்தது. மேலும் பல பஸ்களும் கார்களும் சேத மடைந்தன. இச்சம்பவத்தில் 5 பேர் பலியாகினர். 

15 பேர் காயம் அடைந்தனர். அவர்கள் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டு உள்ளனர். இத்தாக்குதலில் அல்கொய்தாவுடன் தொடர்புடைய அல் ஷபாப் தீவிரவாதிகள் ஈடுபட்டிருக்கலாம் என போலீசார் தெரிவித்துள்ளனர். இவர்கள் சோமாலியாவைச் சேர்ந்தவர்கள். 

இங்கிலாந்திடம் இருந்து கென்யா சுதந்திரம் பெற்று 50 ஆண்டுகள் ஆகிறது. அதைத் தொடர்ந்து கொண்டாட்டங்கள் நடைபெற்று வருகின்றன. 

அதைத் தொடர்ந்து அங்கு தாக்குதல்கள் நடந்து வருகின்றன. கடந்த 3 மாதங்களில் 67 பேரை தீவிரவாதிகள் கொன்று உள்ளனர். 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 2 months ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 2 months ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 3 months ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 3 months ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 5 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 5 months ago