முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

33 இன்ஸ்பெக்டர்கள் இட மாற்றம்

திங்கட்கிழமை, 16 டிசம்பர் 2013      தமிழகம்
Image Unavailable

 

சென்னை, டிச.17 - தமிழகத்தில் பல்வேறு இடங்களில் பணிபுரிந்து வந்த 33 இன்ஸ்பெக்டர்களை இடம் மாற்றம் செய்து தமிழக காவல்துறை டிஜிபி ராமானுஜம் உத்தரவிட்டுள்ளார்.

தமிழக காவல்துறையில் காலியாக உள்ள இடங்களை நிரப்பும் பொருட்டு ஏடிஎஸ்பி யாக இருந்தவர்களை டிஎஸ்பியாகவும், டிஎஸ்பியாக இருந்தவர்களை எஸ்பியாகவும், இன்ஸ்பெக்டர்களாக இருந்தவர்களை உதவி கமிஷனராகவும் பதவி உயர்வு செய்து தமிழக காவல்துறை டிஜிபி ராமானுஜம் உத்தரவிட்டார்.

இதைதொடர்ந்து பல்வேறு போலீஸ் நிலையங்களில் காலியாக உள்ள இன்ஸ்பெக்டர் பணியிடங்களை நிரப்பும் வகையில் 33 இன்ஸ்பெக்டர்களை முதற்கட்டமாக இடம் மாற்றம் செய்து ராமானுஜம் அறிவித்துள்ளார்.சென்னையில் பணிபுரிந்து வந்த 19 இன்ஸ்பெக்டர்களை வெளிமாவட்டத்திற்கு இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர். இதில், குறிப்பாக வேப்பேரி இன்ஸ்பெக்டர் பழனிவேல், மத்திய குற்றபிரிவு இன்ஸ்பெக்டர் ஜெயசங்கர்,  புளியந்தோப்பு அனைத்து மகளிர் போலீஸ் இன்ஸ்பெக்டர் வசந்தி, கோட்டை இன்ஸ்பெக்டர் ஜெகதீஸ்வரன் ஆகியோர் அடங்குவர்.

மேலும், மற்ற மாவட்டங்களில் பணிபுரிந்து  வந்த  14 இன்ஸ்பெக்டர்கள்  பல்வேறு  இடங்களுக்கு மாற்றம் செய்யப்பட்டு உள்ளனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 10 months 2 weeks ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 10 months 2 weeks ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 11 months 2 weeks ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 11 months 2 weeks ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 1 month ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 1 month ago