முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ஜனாதிபதி பிரணாப் டிச.20ம் தேதி சென்னை வருகிறார்

திங்கட்கிழமை, 16 டிசம்பர் 2013      இந்தியா
Image Unavailable

 

சென்னை, டிச.17 - குடியரசு தலைவர் பிரணாப் முகர்ஜி வரும் டிசம்பர் 20ம் தேதி சென்னை வருகிறார். அப்போது, லயோலா கல்லூரி வளாகத்தில் கட்டப்பட்டுள்ள வர்த்தகம் மற்றும் பொருளாதார கல்வி மைய புதிய கட்டிடத்தை திறந்து வைக்க உள்ளார்.

ரூபாய் 11 கோடி செலவில், 4 மாடிகளை உள்ளடக்கிய இவ்வர்த்தகம் மற்றும் பொருளாதார கல்வி மைய கட்டிடம், 46 ஸ்மார்ட் கிளாஸ் வகுப்பறைகளை கொண்டுள்ளதாக, அக்கல்லூரி முதல்வர் ஜோசப் அந்தோணி சாமி தெரிவித்துள்ளார்.

1 லட்சம் சதுர அடிகள் பரப்பளவு கொண்ட இக்கட்டிடம், இக்கல்லூரியின் முன்னாள் மாணவர் ஒருவரின் முன் முயற்சியினால் கட்டப்பட்டுள்ளதாகவும், 16 "ஸ்மார்ட் கிளாஸ்" வகுப்புகள் ஒவ்வொன்றையும் தலா ரூ.20 லட்சம் செலவில் பலரின் நிதியுதவியால் அமைத்துள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.

லயோலாவின் "லிபா"வே இப்படிப்பட்ட கல்வியை வழங்கும்போது, எதற்கு புதிதாக ஒரு கல்வி மையம் என்ற கேள்விக்கு பதிலளித்த அவர், "லிபாவிற்கு சென்னை பல்கலைக்கழகத்துடன் எவ்வித தொடர்பும் இல்லை, அது அகில இந்திய தொழில்நுட்ப கல்வி கவுன்சிலின் நேரடி பார்வையின் கீழ் செயல்பட்டு வருகிறது. ஆனால் புதிய கல்வி மையம் சென்னை பல்கலைக்கழகத்துடன் இணைந்து செயல்படும்" என்று தெரிவித்தார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony