முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

மார்கழி மாத பிறப்பு: கோயில்களில் பக்கதர்கள் கூட்டம்

திங்கட்கிழமை, 16 டிசம்பர் 2013      ஆன்மிகம்
Image Unavailable

 

மதுரை, டிச.17 - மார்கழி மாதப்பிறப்பான நேற்று மதுரையில் உள்ள கோயில்களில் பக்கதர்கள் கூட்டம் அலைமோதியது. திண்டுக்கல்லில் நடந்த விளக்கு பூஜையில் ஏராளமான பெண்கள் கலந்து கொண்டனர். மார்கழி மாதம் கடவுளை வணங்க உகந்த மாதம். இம்மாதத்தில் ஆகாயத்தில் இருக்கும் தேவர்கள் பூமிக்கு வருவதாக ஐதீகம். நேற்று  அதிகாலையில் இருந்தே நீண்ட வரிசையில் காத்திருந்து கோயில்களில் பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர். கூடலழகர் பெருமாள் கோயில், திருமோகூர் காளமேகப் பெருமாள் கோயில்களில் ஏராளமான பக்தர்கள் திருப்பாவை பாடி சுவாமியை வழிப்பட்டனர். பெருமாளுக்கு சிறப்பு அபிஷேகம், தீபாராதனை நடந்தது. பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது. மீனாட்சி அம்மன் கோயில், இம்மையில் நன்மை தருவார் கோயில், அழகர்கோயில், திருப்பரங்குன்றம் உள்ளிட்ட  அனைத்து கோயில்களிலும் ஏராளமான பக்தர்கள் சுவாமி , அம்மன் தரிசனம் செய்தனர். இம்மாதம் வழக்கமாக நடை திறக்கும் நேரத்திற்கு ஒரு மணி நேரத்திற்கு முன்னாதகவே கோயில்களில் நடை திறக்கப்படும். மார்கழி பிறப்பான நேற்று திண்டுக்கல் கோட்டை மாரியம்மன் கோயிலில் திருவிளக்கு பூஜை நடந்தது. இதில் ஏராளமான பெண்கள் கலந்து கொண்டனர். இதேபோல ராமநாதபுரம், தேனி, திண்டுக்கல், பழநி, சிவகங்கை, பிள்ளையார்பட்டி, குன்றக்குடி போன்ற ஊர்களிலும் பக்தர்கள் ஏராளமானோர் வரிசையில் நின்று சாமி தரிசனம் செய்தனர். மார்கழி மாதப்பிறப்பை முன்னிட்டு ராமேஸ்வரம் ராமநாத சுவாமி கோயில் நடை அதிகாலை 3 மணிக்கு திறக்கப்பட்டு 4 மணி முதல் 5 மணி வரை ஸ்படிகலிங்க தரிசனம் நடந்தது. 5.30 மணிக்கு திருப்பள்ளியெழுச்சி முடிந்து 6 மணி கால பூஜை நடந்தது. முதல் ஏராளமான ஐயப்ப பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர். மார்கழி மாதம் என்பதால் ஏராளமான உள்ளூர்வாசிகளும் அதிகாலையிலேயே கோயிலுக்கு வந்து சுவாமி, அம்பாளை தரிசித்துச் சென்றனர். அக்னிதீர்த்தக் கடலில் புனித நீராடிய பக்தர்கள் கோயிலுக்குள் உள்ள 22 தீர்த்தங்களிலும், நீராடி சுவாமி தரிசனம் செய்தனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்