முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

கருணாநிதி மீது காங்கிரஸ் பாய்ச்சல்!

திங்கட்கிழமை, 16 டிசம்பர் 2013      அரசியல்
Image Unavailable

 

சென்னை,டிச.17 - நன்றி கெட்ட கட்சி என்று காங்கிரசை விமர்சனம் செய்ததற்காக தி.மு.க. தலைவர் கருணாநிதிக்கு காங்கிரஸ் தலைவர்கள் கடும் கண்டனம் தெரிவித்துள்ளனர். கனிமொழியின் எம்.பி. பதவிக்காக ஆதரவு கேட்டபோது 2ஜி வழக்கு நினைவுக்கு வரவில்லையா என்றும் அவர்கள் கேள்வி எழுப்பியுள்ளனர். கருணாநிதிக்கு கம்யூனிஸ்ட் கட்சியும் கண்டனம் தெரிவித்துள்ளது. 

பாராளுமன்ற தேர்தல் அடுத்தாண்டு வரவுள்ளது. அநேகமாக வரும் மே மாதம் இந்த தேர்தல் நடைபெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. தேர்தலுக்கான அட்டவணை வரும் மார்ச் மாதம் வெளியாகும் என்றும் தெரிகிறது. இதனிடையே கூட்டணி குறித்து ஆலோசிப்பதற்காக சென்னையில் நேற்று முன்தினம் தி.மு.க. பொதுக்குழு கூடியது. இந்த கூட்டத்தில் கலந்துகொண்ட பொதுக்குழு உறுப்பினர்கள் காங்கிரசுடன் கூட்டணி வேண்டாம் என்று வலியுறுத்தியதாக கூறப்படுகிறது. இந்த கூட்டத்திற்கு பிறகு செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த தி.மு.க. தலைவர் கருணாநிதி,காங்கிரசுடன் தேர்தல் கூட்டணி கிடையாது என்று திட்டவட்டமாக அறிவித்தார். மேலும் காங்கிரஸ் கட்சியை நன்றி கெட்ட கட்சி என்று அவர் கடுமையாக விமர்சனம் செய்துள்ளார். அவரது இந்த விமர்சனம் காங்கிரஸ் தலைவர்கள் மத்தியில் கொந்தளிப்பை ஏற்படுத்தி உள்ளது. இதுகுறித்து தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் ஞானதேசிகன் உள்பட பல்வேறு தலைவர்களும் கருணாநிதிக்கு கண்டனம் தெரிவித்துள்ளனர். கனிமொழியின் எம்.பி.பதவிக்காக காங்கிரசிடம் ஆதரவு கேட்டபோது கருணாநிதிக்கு 2ஜி வழக்கு நினைவுக்கு வரவில்லையா? என்று ஞானதேசிகன் கேள்வி எழுப்பியுள்ளார். 9 ஆண்டு காலம் பதவி சுகத்தை அனுபவித்துவிட்டு தற்போது நன்றி இல்லாமல் பேசுவது கருணாநிதிதான் என்று காங்கிரஸ் தலைவர்கள் குமறுகிறார்கள். 

இளங்கோவன்:_

தி.மு.க. தலைவர் கருணாநிதியின் கருத்தை ஈ.வி.கே.எஸ். இளங்கோவனும் கண்டித்து உள்ளார். அவர் கூறியதாவது:_ காங்கிரஸ் மீது இப்போது கூறும் குறைகளை கருணாநிதி இதற்கு முன்பும் கூறிவந்துள்ளார். இதே கருணாநிதி சில மாதங்களுக்கு முன் தன் மகளின் எம்.பி.பதவிக்காக காங்கிரசிடம் ஆதரவு கேட்டது ஏன்? இருந்தாலும் அவரது அறிவிப்பு எங்களுக்கு நிம்மதியை தந்திருக்கிறது. பெரிய சுமை நீங்கிவிட்டதாக கருதுகிறோம். தி.மு.க.வினரால் எங்களுக்கு ஏற்பட்ட கரை நீங்கிவிட்டதாகவே உணருகிறேன் என்று கூறினார். 

விஜயதாரணி

தி.மு.க.வுடன் நீண்ட நெடுங்காலமாக காங்கிரஸ் உறவு வைத்திருந்தது. ஆனால் ஒருபோதும் தி.மு.க.வுக்கு துரோகம் செய்தது இல்லை. நாங்கள் துரோகம் செய்ததாக கூறுகிறார்கள். மேல்சபை தேர்தலில் கனிமொழி எம்.பி.க்கு ஆதரவு கொடுத்ததை நினைத்துப்பார்க்க வேண்டும். 2ஜி வழக்கு விவகாரத்தில் காங்கிரஸ் நேர்மையாகவே நடந்து கொண்டது. முறையான விசாரணை நடந்துதான் நடவடிக்கையும் எடுக்கப்பட்டது என்று விஜயதாரணி கூறியுள்ளார். தி.மு.க.விலகியதால் காங்கிரசுக்கு எந்த பாதிப்பும் இல்லை என்றும் அவர் கூறினார். 

நாராயாணசாமி

9 ஆண்டுகள் உறவு வைத்திருந்தார்கள். இப்போது என்ன குறையை கண்டார்கள். என்பதுதான் புரியவில்லை என்று மத்திய அமைச்சர் நாராயணசாமி கூறியுள்ளார். ஏற்கனவே கூட்டணியில் இருந்து அவர்கள் விலகினார்கள். அதை அதிகாரப்பூர்வமாக சொல்லியிருக்கிறார்கள். அவ்வளவுதான். யாருடன் கூட்டணி என்பதை காங்கிரஸ் தலைமை முடிவு செய்யும் என்று நாராயணசாமி மேலும் கூறினார். 

கிட்டத்தட்ட 9 ஆண்டு காலம் காங்கிரசுடன் தி.மு.க. கூட்டணி வைத்திருந்தது. 2ஜி வழக்கில் ஆ.ராசாவும் கனிமொழியும் கைதான பிறகுதான் அந்த கூட்டணியில் அவர்களுக்கு ஒரு கசப்பு உணர்வு ஏற்பட்டது. அதுவரை மத்திய காங்கிரஸ் அரசை விமர்சிக்காத கருணாநிதி ஈழத்தமிழர்கள் பிரச்சினை உள்பட பல்வேறு பிரச்சினைகளில் காங்கிரசை மெல்ல மெல்ல விமர்சிக்க ஆரம்பித்தார். தற்போது ஒரே அடியாக உறவை முறித்துக்கொண்டுவிட்டார். ஆனால் இதை சந்தர்ப்பவாதம் என்கிறார்கள் அரசியல் ஆர்வலர்கள். 

கருணாநிதியின் விமர்சனத்தை இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் தா.பாண்டியனும் கண்டித்து உள்ளார். இதுகுறித்து தா.பாண்டியன் கூறியதாவது:_

இலங்கையில் முள்ளிவாய்க்கால் பகுதியில் 40 ஆயிரத்திற்கும் மேற்பட்ட தமிழர்கள் கொன்று குவிக்கப்பட்டபோது கருணாநிதிக்கு வராத கோபம் இப்போது வந்திருக்கிறது. காரணம் 2ஜி வழக்கில் ஆ.ராசாவையும் கனிமொழியையும் சிக்க வைத்தது காங்கிரஸ், சிறையில் தள்ளியது காங்கிரஸ் என்று கருணாநிதி கூறுகிறார். 2ஜி வழக்கு முடியும் தருவாயில் அவர் இப்படி சொல்கிறார். ஆக குடும்பமா? நாடா? என்ற கேள்வி வரும்போது குடும்பத்தை முன்னிலைப்படுத்துவதுதான் அவருக்கு வழக்கம். தமிழர்கள் கொல்லப்பட்டபோது வராத கோபம் இப்போது அவருக்கு வருகிறது என்றால் எல்லாம் குடும்பப்பாசம்தான். தன் கட்சியினரை 2ஜி வழக்கில் சிக்க வைத்துவிட்டார்கள் என்ற கோபம்தான் அவரது விமர்சனத்திற்கு காரணம். இவ்வாறு தா.பாண்டியன் கருணாநிதி மீது அடுக்ககாக குற்றஞ்சாட்டியுள்ளார். மேலும் பல்வேறு கட்சிகளை சேர்ந்த தலைவர்களும் கருணாநிதியை கண்டித்து உள்ளனர். இது கருணாநிதியின் சந்தர்ப்பவாத அரசியல் என்றும் அவர் ஒரு நல்ல நடிகர் என்றும் அவரை அவரது கட்சியினரே நம்பமாட்டார்கள் என்றும் பல்வேறு அமைப்பின் தலைவர்கள் தெரிவித்தனர். கனிமொழியின் எம்.பி.பதவிக்காக ஆதரவு கேட்டபோது 2ஜி வழக்கு பற்றி கருணாநிதியின் நினைவுக்கு வராதது ஏன் என்றும் சில பிரமுகர்கள் கேள்வி எழுப்பினர். கருணாநிதியின் விமர்சனம் காங்கிரஸ் தலைவர்கள் மத்தியில் மட்டுமல்ல சமூக ஆர்வலர்கள், பொதுமக்கள் மத்தியிலும் வியப்பையும் கொந்தளிப்பையும் ஏற்படுத்தி உள்ளது. 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

தீக்காயங்கள் குணமாக | தீப்புண் கொப்பளங்கள் குணமாக | தீப்புண் வடு மறைய | காயம் விரைவில் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 3 weeks ago குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 6 months 1 week ago பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 1 week ago
தொடர் தும்மல் நிற்க | ஜலதோஷம் நீங்க | நீர் கோர்வை குணமாக | சுவாசக்குழாய் அலர்ஜி 7 months 1 week ago மாரடைப்பை தடுக்க | நெஞ்சுவலி குணமாக | இதயம் படபடப்பு நீங்க | இருதயம் பலமடைய 8 months 5 days ago இருமல் குணமாக | இளைப்பு குணமாக | வரட்டு இருமல் | கக்குவான் இருமல் வேகம் குறைய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 5 days ago