முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

நள்ளிரவு கூத்திற்கு கட்டுப்பாடு: இராம.கோபாலன் பாராட்டு

செவ்வாய்க்கிழமை, 24 டிசம்பர் 2013      தமிழகம்
Image Unavailable

 

சென்னை டிச 25 - ஓட்டல்களில் நள்ளிரவு கூத்திற்கு கட்டுப்பாடு விதித்த காவல்துறைக்கு இந்து முன்னணி அமைப்பாளர் இராம.கோபாலன் பாராட்டு தெரிவித்துள்ளார். இது குறித்து  அவர் வெளியிட்ட அறிக்கையில்,

ஒவ்வொரு ஆண்டும் கிறிஸ்துமஸ், டிசம்பர் 31 நள்ளிரவு (ஆங்கிலப் புத்தாண்டு) கொண்டாடுகிறோம் என்ற பெயரில் அநாகரிக காட்சிகள் அரங்கேறுவதுடன், கொலை, பலாத்காரங்கள், விபத்து, <வ் டிசிங் போன்றவற்றால் மக்கள் பெரும் இன்னல்களுக்கு ஆளாகிறார்கள்.

இதனைத் தடுக்க காவல்துறை ஆணையர் எடுத்துள்ள முன்னெச்சரிக்கை நடவடிக்கையை இந்து முன்னணி சார்பில் பாராட்டுகிறோம், வரவேற்கிறோம்.

இரவு பூராவும் குடித்து கும்மாளமிட்டுவிட்டு, போதையிலேயே இரவில் பைக், கார் ரேஸ் போவோரைக்  கைது செய்வதுடன், வண்டிகளைப் பறிமுதல் செய்ய வேண்டும்.

நள்ளிரவில் பெண்களிடம் ஹஹேப்பி நியூ இயர்" சொல்வதாக கைகளைப்பிடித்து தகாத முறையில் நடந்துகொள்வோரை உடனடியாக கைது செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இதுபோன்ற பொது இடங்களில் அநாகரிகத்தைத் தடுக்க வீடியோ கண்காணிப்பின் மூலம் நடவடிக்கை எடுக்க வேண்டும். ஹபுகாரின் மீது வழக்குப் பதிவு" என்பதை விடுத்து காவல்துறை நேரடியாக கண்காணிப்பு நடவடிக்கையில் இறங்க வேண்டும்.

காவல்துறை சட்ட ஒழுங்கைப் பாதுகாக்க தன்னார்வ தொண்டு அமைப்புகளின் உதவியையும் கோரலாம்.

மதுக்கடைகளில் இரவு விற்பனையைத் தடை செய்ய வேண்டும். கள்ளச் சந்தையில் மது விற்போரையும் கைது செய்ய வேண்டும். பொது வீதிகளில் குடிப்போர், குடித்துவிட்டு ரகளையில் <டுபடுவோரை கைது செய்ய வேண்டும் என்றும் கேட்டுக்கொள்கிறோம்.

நள்ளிரவில் திருக்கோயில்கள் திறக்க தடை விதிக்க வேண்டும்..

வைகுண்ட ஏகாதசி, சிவராத்திரி ஆகிய இரண்டு நாட்கள் நீங்கலாக நள்ளிரவில் ஆலய பூஜைகள் நடைபெறுவது கூடாது. ஆகம விதிகளுக்கும், இந்து சமய நம்பிக்கைகளுக்கும் புறம்பாக வியாபார நோக்கோடு டிசம்பர் 31 அன்று நள்ளிரவில் திறக்கப்பட்டு பூஜைகள் செய்யும் இந்து சமய அறநிலையத்துறையின் கீழ் உள்ள ஆலயங்களானாலும், தனியார் நிர்வாகத்தின் கீழ் உள்ள ஆலயங்கள் ஆனாலும் இந்து முன்னணி கடுமையாக எதிர்க்கும். மக்களை ஒருங்கிணைத்துப் போராட்டம் நடத்தும்.

சூரிய உதயத்திலிருந்துதான் நாள் ஆரம்பமாகிறது. அப்போதுதான் பிராண வாயு அதிகம் கிடைப்பதால், இயற்கையான நாளின் துவக்கம் சூரிய உதயமாகும். அதனாலேயே தாவரங்கள், பறவைகள், விலங்குகள் முதலானவை எல்லாம் விடிந்ததும் தங்களது செயல்களைத் துவக்குகின்றன. இரவு என்பது உயிர் காற்றுச் சக்தியான ஆக்ஸிஜன் குறைவாக உள்ளதாலும், குளிர்ச்சியான சீதோஷ்ணத்தாலும் ஓய்வுக்கும், உறக்கத்திற்கும் ஏற்றது. இரவில் ஓய்வெடுப்பதால், நமது உடலும் மனமும் பகலில் உற்சாகமாக வேலை செய்கிறது. இதற்கு நேர்மாறாக மனிதன் செயல்பட்டால் பலவித நோய்களுக்கு ஆளாகி அவனது ஆயுள் குறைகிறது என்பது அறிவியல் பூர்வமான உண்மை.

இந்து சமய நம்பிக்கைகளுக்கு விரோதமாக ஆங்கிலப் புத்தாண்டிற்காக நள்ளிரவில் பூஜை செய்வதை இந்து முன்னணி எதிர்த்துப் போராடும்.

 இவ்வாறு அந்த அறிக்கையில் அவர் கூறியுள்ளார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்