முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

சிம்பு இசை ஆல்பத்திற்காக டி.ராஜேந்தரிடம் மோசடி

செவ்வாய்க்கிழமை, 24 டிசம்பர் 2013      சினிமா
Image Unavailable

சென்னை, டிச.25 - திரைப்பட நடிகர் டி.ராஜேந்தர், தன்னிடம் ரூ.1 மோசடி செய்தவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என சென்னை பெருநகர காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் அளித்தார்.

திரைப்பட இயக்குநரும், நடிகருமான டி.ராஜேந்தர் சென்னை பெருநகர காவல் ஆணையர் அலுவலகத்துக்கு திங்கள்கிழமை வந்தார். அங்கு குறள் டி.வி. கிரியேசன் நிறுவனம் சார்பில் மத்திய குற்றப்பிரிவு கூடுதல் ஆணையர் ஆர்.எஸ்.நல்லசிவத்தை சந்தித்து ஒரு மனு அளித்தார்.

பின்னர் அந்த மனு குறித்து அவர், செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டி:

எனது மகன் சிலம்பரசன் பாடி தயாரித்துள்ள லவ் ஆந்தம் என்ற இசை ஆல்பத்துக்காக அமெரிக்காவை சேர்ந்த பிரபல பாடகர் ஏகானை ஒப்பந்தம் செய்ய முடிவு செய்தோம். இது தொடர்பாக ஏகானை பாட வைப்பதற்காக, தமிழகத்தைச் சேர்ந்த ராம்ஜி சோமா, கனடாவைச் சேர்ந்த தல்வீர்ந்தர்பாத் என்ற டெர்ரி பாத் ஆகிய இருவரையும் சந்தித்தோம். பின்னர் எங்களுக்குள் ஒரு ஒப்பந்தம் செய்து கொண்டோம் அதன்படி, பாடகர் ஏகானை ஆல்பத்தில் பாட அழைத்து வர வேண்டும், அவரை அழைத்து வர முடியாவிட்டால் நாங்கள் கொடுக்கும் பணத்தை திருப்பித் தர வேண்டும் என ஒப்பந்ததம் செய்து கையெழுத்திட்டோம்.

இதற்காக அவர்கள் கேட்ட பணத்தை நான், டெபாசிட் செய்தோம். ஆனால் ஏகான், இசைப் பதிவுக்கு வரவில்லை. எங்களிடம் பணத்தை வாங்கிய டெர்ரி பாத்திடமும், ராம்ஜி சோமாவிடமும் ஏகான் வராமல் இருப்பது குறித்து கேட்டதற்கு சரியான பதில் அளிக்கவில்லை. மேலும் நான் கொடுத்த ரூ.1 கோடி பணத்தையும் அவர்கள் திருப்பித் தராமல் இழுத்தடித்தனர்.

இதனால் ஏகானை நேரடியாகவே தொடர்பு கொண்டு, அவரை எங்களது இசை ஆல்பத்தில் பாட வைத்தோம். இதன் பின்னரே டெர்ரி பாத்தும்,ராம்ஜியும் மோசடி நபர்கள் என்பது தெரியவந்தது.

இதையடுத்து பணத்தை திருப்பிக் கேட்டு அனுப்பி வழக்கறிஞர் நோட்டீஸயும் அவர்கள் பெறாமல், திருப்பி அனுப்பியுள்ளனர். எனவே போலீஸார் அவர்கள் இருவர் மீதும் நடவடிக்கை எடுத்து, பணத்தை திருப்பித் தர நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார் டி.ராஜேந்தர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 10 months 2 weeks ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 10 months 2 weeks ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 11 months 2 weeks ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 11 months 2 weeks ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 1 month ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 1 month ago