முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

தலிபான் தீவிரவாத இயக்க தலைவன் முல்லா உமர் பாக்.கில் சுட்டுக்கொலை

செவ்வாய்க்கிழமை, 24 மே 2011      உலகம்
Image Unavailable

இஸ்லாமாபாத், மே. 24 - தலிபான் தீவிரவாத இயக்கத்தலைவன் முல்லா உமரும் பாகிஸ்தானில் நேற்று சுட்டுக்கொல்லப்பட்டான் என்று ஆப்கானிஸ்தான் தொலைக்காட்சியான தொலோ தெரிவித்துள்ளது. அல்கொய்தா தீவிரவாத இயக்கமும் தலிபான் தீவிரவாத இயக்கமும் சேர்ந்து செயல்பட்டு வந்தன. இந்த இரண்டு தீவிரவாத இயக்கங்களும் அமெரிக்காவுக்கு எதிராக செயல்பட்டு வந்தன. அமெரிக்காவை அல்கொய்தா தீவிரவாத இயக்கம் தாக்குதல் நடத்தியபோது ஆப்கானிஸ்தான் அதிபராக முல்லா உமர் இருந்தான். ஆப்கானிஸ்தான் மீது அமெரிக்கா படையெடுத்தபோது முல்லா உமர் தப்பி தலைமறைவாகிவிட்டான். அதன் பின்னர் பாகிஸ்தானுக்கு சென்று அங்கிருந்து அமெரிக்காவுக்கு எதிராக அல்கொய்தா தீவிரவாத இயக்கும் தலிபான் தீவிரவாத இயக்கமும் சேர்ந்து செயல்பட்டு வந்தன. இந்தநிலையில் அல்கொய்தா தீவிரவாத இயக்க தலைவன் பின்லேடன் அமெரிக்க படையினரால் பாகிஸ்தானில் சுட்டுக்கொல்லப்பட்டான். முல்லா உமரையும் அமெரிக்க படையினர் தேடி வந்தனர். அவனும் பாகிஸ்தானில்தான் பதுங்கி இருப்பது தெரியவந்தது. இந்தநிலையில் பாகிஸ்தானில் குவட்டா நகரில் இருந்து மேற்கு மலைப்பகுதியான வஜ்ரிஸிதானுக்கு முல்லா சென்றுகொண்டியிருந்தபோது அவனை ஐ.எஸ்.ஐ.யின் முன்னாள் தலைமை ஜெனரல் ஹமீத் குல் என்பவர் சுட்டுக்கொலை செய்துவிட்டதாக ஆப்கானிஸ்தான் தேசிய பாதுகாப்பு இயக்குனரகத்தை மேற்கோள்காட்டி அந்த நாட்டு தொலோ என்ற தொலைக்காட்சி செய்தியை வெளியிட்டுள்ளது. இந்த சம்பவம் கடந்த 3 நாட்களுக்கு முன்பு நடந்தது என்றும் ஆனால் அதுகுறித்து அதிகாரப்பூர்வ தகவல்கள் எதுவும் இல்லை என்பதோடு, முல்லாவை யார் சுட்டுக்கொலை செய்தது என்பதும் இன்னும் உறுதி செய்யப்படவில்லை. மேலும் முல்லா உமர் சுட்டுக்கொலை செய்யப்படவில்லை என்று தெஹ்ரீக்-இ-தலிபான் தீவிரவாத இயக்கம் மறுத்துள்ளதாக பாகிஸ்தானில் உள்ள எங்கள் நாட்டு பத்திரிகையாளர் ஒருவர் தெரிவித்துள்ளார் என்று சீன நாட்டு தொலைகாட்சியும் தெரிவித்துள்ளது. அல்கொய்தா தீவிரவாத இயக்கத்தலைவன் பின்லேடன் சுட்டுக்கொலை செய்யப்பட்ட ஒரு மாத காலத்திற்குள் தலிபான் தீவிரவாத இயக்க தலைவன் முல்லா உமரும் சுட்டுக்கொலை செய்யப்பட்டுவிட்டான் என்று கூறப்படுகிறது. இந்த இரண்டு தீவிரவாத இயக்கங்களின் முதுகெலும்பு முறிக்கப்பட்டுவிட்டதால் இந்தியாவில் மட்டுமல்லாது உலக அளவில் ஓரளவு தீவிரவாதம் கட்டுப்படுவதற்கு வாய்ப்பு உள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 2 weeks ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 2 weeks ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 1 month ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 1 month ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 3 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 3 months ago