Idhayam Matrimony

இந்தியாவுக்கு வருவதற்கு முன்பு உயில் எழுதிவைத்த ஹெட்லி

வியாழக்கிழமை, 26 மே 2011      உலகம்
Image Unavailable

சிகாகோ, மே - 26 - இந்தியாவுக்கு தான் செல்லும்போது தான் கைது செய்யப்படலாம் என்ற அச்சத்தில் மும்பை தாக்குதல் தீவிரவாதி டேவிட் ஹெட்லி தனது குடும்பத்தினருக்கு என்ன செய்ய வேண்டும் என்பதை ஒரு உயில் எழுதி அதை தனது நண்பனுக்கு ஈமெயில் மூலம் அனுப்பிவைத்துள்ளான். 2008 ஆம் ஆண்டு நவம்பர் 26 மும்பை தாக்குதல் சம்பவத்தில் கூட்டுச் சதியாளனாக செயல்பட்ட டேவிட் ஹெட்லி அமெரிக்காவில் கைது செய்யப்பட்டான். இவனிடம் போலீசார் நடத்திய விசாரணையில் பல திடுக்கிடும் தகவல்கள் வெளியாகியுள்ளன. மும்பை தாக்குதல் நடந்த பிறகு 2009 ஆம் ஆண்டு ஹெட்லி இந்தியாவுக்கு வந்தான். அவன் இந்தியாவுக்கு வருவதற்கு முன்பாக 2009 மார்ச் 3 ம் தேதி தனது நண்பன் தகவூர் ராணாவுக்கு ஒரு ஈமெயில் அனுப்பினான். அதில் தனது மனைவிகளுக்கும் குழந்தைகளுக்கும் என்னென்ன செய்வது என்பது குறித்த விபரங்களை தெரிவித்திருக்கிறான்.
நான் இந்தியாவுக்கு போகப்போகிறேன். இப்போது  நிலைமை மிகவும் மோசமாக இருக்கிறது. எனவே நான் கைது செய்யப்படலாம். அல்லது இறக்கவும் நேரிடலாம். அதனால் இந்தியாவுக்கு போவதற்கு முன்பாக எனது மனைவிகள் மற்றும் குழந்தைகளுக்கு என்னென்ன செய்ய வேண்டும் என்பது குறித்த விபரங்களை இத்துடன் அனுப்பியுள்ளேன் என்று அந்த ஈமெயிலில் ஹெட்லி கூறியிருந்தான்.
மும்பை தாக்குதலுக்கு பிறகு இந்தியாவில் பாதுகாப்பு கண்காணிப்புகள் அதிகரிக்கப்பட்டுள்ளதால் மீண்டும் இந்தியாவுக்கு செல்ல ஹெட்லி பயப்பட்டு இருக்கிறான். அதனால்தான் இந்த உயில் விபரங்களை ராணாவுக்கு அனுப்பி வைத்திருக்கிறான். இந்த விபரங்களை அமெரிக்க போலீசார் தெரிவித்துள்ளனர்.
ஆனால் ஹெட்லி பயந்ததுபோல் இந்தியாவில் எதுவும் நடக்கவில்லை. ஹெட்லி தான் வந்த வேலையை முடித்துக்கொண்டு அமெரிக்கா திரும்பியிருக்கிறான். 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 1 week ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 1 week ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 1 month ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 1 month ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 3 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 3 months ago