முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

பாக் ஐ.எஸ்.ஐ.யிடம் பயிற்சி பெற்றேன்: ஹெட்லி

வெள்ளிக்கிழமை, 27 மே 2011      உலகம்
Image Unavailable

 

சிகாகோ,மே.27 - உளவு பார்க்கும் பயிற்சியை பாகிஸ்தானின் உளவு ஸ்தாபனமான ஐ.எஸ்.ஐ.யிடம் பெற்றேன் என்று தீவிரவாதி டேவிட் ஹெட்லி தெரிவித்துள்ளான். பாகிஸ்தானில் இருந்து கொண்டு இந்தியாவில் நாசவேலையில் ஈடுபட்டு வரும் கொடூர தீவிரவாத இயக்கமான லஷ்கர்-தொய்பாவின் ஏஜண்டாக செயல்பட்டு வந்த தீவிரவாதி டேவிட் ஹெட்லி, அமெரிக்க போலீசாரிடம் வாக்குமூலம் கொடுத்துள்ளான். அதில் பல திடுக்கிடும் தகவல்கள் வெளியாகி உள்ளன. மும்பையில் கடந்த 2008-ம் ஆண்டு லஷ்கர்-இ-தொய்பா தீவிரவாத இயக்கம் சார்பாக நடத்திய தாக்குதலுக்கு ஹெட்லி மூளையாக செயல்பட்டு உள்ளான். மேலும் கொச்சி, புனே, டெல்லி, மும்பை ஆகிய பெரும் நகரங்களுக்கு அடிக்கடி சென்று தாக்குதல் நடத்தப்படும் இடங்களில் நோட்டம் விட்டுள்ளான். மும்பை தாக்குதலுக்கு பிறகு டெல்லியில் ராணுவ பயிற்சி கல்லூரியை தாக்க ஹெட்லி திட்டமிட்டிருந்ததும் அவன் கொடுத்த வாக்குமூலத்தில் தெரியவந்துள்ளது. 

மேலும் ஆயுத தாக்குதல் மற்றும் குண்டுவெடிப்பது தொடர்பாகவும் உளவு பார்ப்பது எப்படி என்றும் டேவிட் ஹெட்லிக்கு பாகிஸ்தானி ன் உளவு ஸ்தாபனமான ஐ.எஸ்.ஐ. பயிற்சி கொடுத்தது தெரியவந்ததுள்ளது இதை ஹெட்லியே தனது வாக்குமூலத்தில் கூறியுள்ளான். அமெரிக்காவில் உள்ள சிகாகோ கோர்ட்டில் ஹெட்லி கொடுத்த வாக்குமூலம் தாக்கல் செய்யப்பட்டுள்ளது. மேலும் அவனிடம் கடந்த 3 நாட்களாக அரசு வழக்கறிஞர் சார்லஸ் டி. ஷிவிப்ட் குறுக்கு விசாரணை நடத்தி வருகிறார். அப்போது இந்த தகவல்கள் வெளியாகியுள்ளன.  

டேவிட் ஹெட்லி கொடுத்துள்ள வாக்குமூலமூம் சிகாகோ கோர்ட்டில் அரசு வழக்கறிஞர் தாக்கல் செய்துள்ள ஹெட்லியின் வாக்குமூலம் ஒன்றாக இருப்பதோடு மும்பை தாக்குதலை லஷ்கர்-இ-தொய்பா தீவிரவாத இயக்கம்தான் நடத்தியது என்று இந்தியா கூறிவதற்கு ஒரு ஆதாரமாக அமைந்துள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 2 weeks ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 2 weeks ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 1 month ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 1 month ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 3 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 3 months ago