முக்கிய செய்திகள்

ஜே.கே.ரித்தீஸ் எம்.பி. ராமநாதபுரம் நீதிமன்றத்தில் ஆஜர்

வெள்ளிக்கிழமை, 27 மே 2011      சினிமா
1Rithesh MP 0

ராமநாதபுரம், மே.27 - சட்டமன்ற தேர்தல் நேரத்தில் தேர்தல் விதிமுறைகளை மீறி நடந்ததாக தேர்தல் ஆணையம் தொடர்ந்த வழக்கில் ஜே.கே. ரித்தீஸ் எம்.பி., ராமநாதபுரம் நீதிமன்றத்தில் ஆஜரானார். கடந்த சட்டமன்ற தேர்தலின் போது ராமநாதபுரம் தொகுதி தி.மு.க. எம்.பி ஜே.கே. ரித்தீஸ் பல்வேறு அத்துமீறல்களில் ஈடுபட்டார். சோழந்தூர் அருகே பிச்சங்குறிச்சியில் தலித் சமுதாயத்தை சேர்ந்த வாக்காளர்கள் மீது தாக்குதல் நடத்தியது உள்ளிட்ட பல வழக்குகள் அவர் மீது போடப்பட்டுள்ளன. பிச்சங்குறிச்சி வழக்கில் அவர் தேர்தல் முடியும் வரை ராமநாதபுரம் மாவட்டத்துக்குள்ளேயே நுழைய நீதிமன்றம் தடை விதித்திருந்தது. அதற்கு பின்னர் வாக்கு எண்ணிக்கை முடியும் வரை அவர் ராமநாதபுரம் மாவட்டத்துக்குள் நுழையக் கூடாது என்று தடை விதித்திருந்தது. இந்திய பாராளுமன்ற வரலாற்றிலேயே ஒரு பாராளுமன்ற உறுப்பினர் அவரது தொகுதிக்குள் நுழைய தடை விதித்தது இதுவே முதல் முறை என்று கூறப்படுகிறது. இந்த நிலையில் ரித்தீஷ் எம்.பி. அண்மையில் நடந்த சட்டமன்ற தேர்தலின் போது தேர்தல் விதிமுறைகளை மீறி நடந்ததாக ராமநாதபுரம் பஜார் காவல் நிலையத்தில் தொடரப்பட்ட வழக்கில் அவர் நேற்று ராமநாதபுரம் ஜே.எம். 2 நீதிமன்றத்தில் நீதிபதி சுரேஷ் முன்னிலையில் ஆஜரானார். 

இதை ஷேர் செய்திடுங்கள்: