முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ராசாவின் சொல்படி நடந்தவர் பெகுரா நீதிமன்றத்தில் சி.பி.ஐ. குற்றச்சாட்டு

சனிக்கிழமை, 28 மே 2011      இந்தியா
Image Unavailable

புது டெல்லி,மே.- 28 - அரசின் கொள்கையை பின்பற்றாமல் ராசாவின் சொல்படி தொலைத் தொடர்பு துறை முன்னாள் செயலர் சித்தார்த் பெகுரா நடந்து கொண்டுள்ளார் என்று நீதிமன்றத்தில் சி.பி.ஐ. குற்றம் சாட்டியுள்ளது.  2 ஜி அலைக்கற்றை வழக்கில் சிறையில் உள்ள பெகுராவின் ஜாமீன் மனு டெல்லி சி.பி.ஐ. சிறப்பு கோர்ட்டில் மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது அவருக்கு ஜாமீன் வழங்கக் கூடாது என்று சி.பி.ஐ. தரப்பில் வாதாடப்பட்டது.
அலைக்கற்றை பெறுவதற்குரிய தகுதிகள் அந்த நிறுவனத்துக்கு இல்லை எனினும் பெகுரா தனது அதிகாரத்தை தவறாக பயன்படுத்தி அந்த நிறுவனத்துக்கு சாதகமாக நடந்து கொண்டுள்ளார் என்று சி.பி.ஐ. வழக்கறிஞர் வாதிட்டார். முன்னதாக பெகுரா தரப்பில் அவருக்கு ஜாமீன் கோரி வாதிட்ட வழக்கறிஞர் முறைகேடுகள் அனைத்துக்கும் ராசாதான் காரணம். அவர்தான் அலைக்கற்றை ஒதுக்கீடு கொள்கைகளை சட்ட விரோதமாக மாற்றியுள்ளார். எவ்வித ஆட்சேபமும் தெரிவிக்கவில்லை.
மேலும் இநத தொலைத் தொடர்பு துறை கொள்கை விஷயத்தில் பிரதமர், மத்திய நிதியமைச்சகம், சட்ட அமைச்சகம் ஆகியவற்றின் பங்களிப்பும் இருந்துள்ளது. இந்நிலையில் தொலைத் தொடர்பு துறை செயலர் இதில் குறிப்பிட்ட அளவுக்குதான் தலையிட முடியும் என்று வாதிட்டார். இரு தரப்பு வாதங்களையும் கேட்ட சி.பி.ஐ. நீதிமன்றம் ஜாமீன் மனு மீதான வழக்கு விசாரணையை ஒத்தி வைத்தது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 2 months ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 2 months ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 3 months ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 3 months ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 5 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 5 months ago