முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

பீகாரில் டாக்டரை அடித்து கொன்ற கைதிகள்

செவ்வாய்க்கிழமை, 31 மே 2011      இந்தியா
Image Unavailable

 

பாட்னா, மே. 31 - பீகார் மாநிலத்தில் உள்ள ஜெயிலில் ஆத்திரமடைந்த கைதிகள் ஒன்று கூடி, டாக்டரை அடித்துக் கொன்றனர். இந்த பயங்கர சம்பவம் தொ டர்பாக விசாரணைக்கு அரசு உத்தரவிட்டுள்ளது. இது பற்றிய விபரம் வருமாறு - 

பீகார் மாநிலம் கோபால் கஞ்சில் ஜெயில் ஒன்று உள்ளது. இங்கு டா க்டராக பணியாற்றினார் புதவ்தேவ் சிங். இவர் முன்னாள் எம்.பி. சத் யதேவ் சிங்கின் இளைய சகோதரர் ஆவார். 

புதவ்தேவ் சிங் நேற்று கைதிகளுக்கு வழக்கமான பரிசோதனை செய்து கொண்டு இருந்தார். அப்போது அந்த ஜெயிலில் இருந்த ஆயுள் தண்டனை கைதி ராஜன் யாதவ் தனக்கு போலி மருத்துவ சான்றிதழ் வேண்டும் என்று டாக்டரிடம் கேட்டார். 

அந்த ஜெயிலில் இருந்து வேறு ஜெயிலுக்கு மாற்றாமல் இருப்பதற்கா  க இந்த சான்றிதழை தருமாறு டாக்டரிடம் கேட்டார். ஆனால் புதவ் தேவ் சிங் போலி சான்றிதழ் கொடுக்க மறுத்தார். 

இதனால் ஆத்திரமடைந்த ராஜன் யாதவும், மற்ற 6 கைதிகளும்சேர்ந்து டாக்டரை சரமாரியாக தாக்கினார்கள். இதில் பலத்த காயம் அடைந்த அவரை சிறைக் காவலர்கள் மீட்டனர். 

பின்பு, பலத்த காயம் அடைந்த அவர் கோபால் கஞ்ச் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். அங்கு அவரது உடல் நிலை மோச மாக இருந்ததால், பாட்னா அரசு மருத்துவக் கல்லூரி ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். ஆனால் அங்கு சிகிட்சை பலன் அளிக்காமல் டாக்டர் புதவ்தேவ் சிங் மரணம் அடைந்தார். 

ஜெயிலில் டாக்டரை அடித்துக் கொன்ற சம்பவம் பீகாரில் பெரும் பர பரப்பை ஏற்படுத்தி உள்ளது. இதற்கு கண்டனம் தெரிவித்து நாடு முழு வதும் வேலை நிறுத்தத்தில் ஈடுபடப்போவதாக இந்திய மருத்துவக் கழக சங்கம் அறிவித்துள்ளது.

இந்த சம்பவம் தொடர்பாக உயர்மட்ட விசாரணைக்கு முதல் மந்திரி நிதீஷ் குமார் உத்தரவிட்டுள்ளார். அவர் கூறும் போது, இது அதிர்ச்சி யான சம்பவம். இதை தாங்கிக் கொள்ள முடியாது என்றார். 

மாநில உள்துறை செயலாளர் அமீர் சபுஹனி விசாரணை நடத்த கோ பால் கஞ்ச் மருத்துவமனைக்கு விரைந்து சென்று உள்ளார். டாக்டர் அடித்துக் கொல்லப்பட்ட  சம்பவம் தொடர்பாக 7 கைதிகள் மீது கொலை வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. 

சுகாராதாரத் துறை மந்திரி அஸ்வினி குமார் கூறும் போது, டாக்டர்க ளை பாதுகாக்கும் சட்ட மசோதாவை மாநில அரசு வரும் சட்டமன்ற கூட்டத் தொடரில் கொண்டு வரும் என்றார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 1 week ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 1 week ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 1 month ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 1 month ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 3 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 3 months ago