முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ராதாரவி மகன் திருமணம்: நடிகர்​ நடிகைகள் வாழ்த்து

திங்கட்கிழமை, 6 ஜூன் 2011      சினிமா
Image Unavailable

 

சென்னை, ஜூன்.- 6 - நடிகர் ராதாரவி மகன் ஹரி ராதாரவிக்கும், பெங்களூரைச் சேர்ந்த டி.மோகன்​சாந்தி தம்பதி மகள் திவ்யா என்ற மகாலட்சுமிக்கும் திருமணம் நிச்சயிக்கப்பட்டது.  ஹரி ராதாரவி​திவ்யா திருமணம் சென்னை வானகரத்தில் உள்ள ஸ்ரீவாரு வெங்கடாசலபதி திருமண மண்டபத்தில் நேற்று நடந்தது. காலை 10.20 மணிக்கு வைதீக முறைப்படி மணமகளுக்கு மணமகன் தாலி கட்டினார். திருமணத்துக்கு வந்திருந்தவர்கள் அட்சதை தூவி மணமக்களை வாழ்த்தினார்கள். திருமண வரவேற்பு நிகழ்ச்சியில் முதலமைச்சர் ஜெயலலிதா பங்கேற்று மணமக்களை வாழ்த்தினார். நடிகர்கள் சத்யராஜ், சரண், ஆனந்தராஜ், ஒய்.ஜி.மகேந்திரன், நடிகைகள் மனோரமா, குயிலி, தீபா வெங்கட், பட அதிபர்கள் ஏ.வி.எம்.சரவணன், கே.ஆர்.ஜி, அபிராமி ராமநாதன், ஜி.சேகரன், கலைஞானம், அமிர்ஜான், எஸ்.ஏ.சந்திரசேகர், செந்தில், கரண் மற்றும் பலர் வாழ்த்தினார்கள்.

சட்டமன்ற எதிர்க்கட்சி தலைவர் விஜயகாந்த், அமைச்சர் கோகுலஇந்திரா ஆகியோர் நேரில் வாழ்த்தினர். நடிகர்கள் பிரபு, நிழல்கள் ரவி, விவேக், நாசர், சுந்தர்.சி, குமரிமுத்து, தயாரிப்பாளர்கள் ஆர்.பி. சவுத்ரி, ராம்குமார், ஏ.வி.எம்.முருகன், தமிழ் மணி, மலேசியாவைச் சேர்ந்த டத்தோ சாமுவேல், டைரக்டர்கள் ஹரி, மதுமிதா, சி.வி.ராஜேந்திரன் உள்ளிட்ட பலர் வாழ்த்து தெரிவித்தனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony