எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
வாஷிங்டன்,மே.8 - ஐக்கிய நாடுகள் பொதுச்செயலாளர் பதவிக்கு நான் மீண்டும் போட்டியிடப்போகிறேன் என்றும் அதற்கான முயற்சியில் இறங்கிவிட்டேன் என்றும் தற்போது பொதுச்செயலாளராக இருக்கும் பான் கீன் மூன் தெரிவித்துள்ளார். ஐக்கிய நாடுகள் சபையின் பொதுச்செயலாளராக தென்கொரியா நாட்டுக்காரரான பான் கீ மூன் இருக்கிறார். அவரது பதவிக்காலம் விரைவில் முடியவிருக்கிறது. கடந்த முறை இவரை எதிர்த்து இந்திய சார்பாக கேரள மாநிலத்தை சேர்ந்தவர் நிறுத்தப்பட்டார். ஆனால் அவர் தோல்வி அடைந்துவிட்டார். பான் கீ மூன் தேர்ந்தெடுக்கப்பட்டார். அந்த பதவிக்கு பான் கீன் மூன் மீண்டும் போட்டியிடுகிறார். நியூயார்க் நகரில் உள்ள ஐக்கிய நாடுகள் சபை தலைமை அலுவலகத்தில் மூன் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறுகையில் பொதுச்செயலாளர் பதவிக்கு நான் மீண்டும் போட்டியிடுகிறேன். எனக்கு ஆதரவு தரும்படி ஐக்கிய நாடுகள் சபை மற்றும் பாதுகாப்பு சபையில் உறுப்பினர்களாக உள்ள நாடுகளிடம் ஆதரவு கேட்டு தனித்தனியாக கடிதம் எழுதியுள்ளேன் என்றார். அந்த சபைக்கு நான் பணியாற்ற எனக்கு தகுதி உள்ளது. அதனால் மீண்டும் எனக்கு ஆதரவு அளித்தால் நான் மேலும் சிறப்பாக பணிபுரிவேன் என்று அந்த கடிதத்தில் மூன் கூறியுள்ளார். என்னுடைய இந்த பதவிக்காலத்தில் அனைத்து உறுப்பு நாடுகளிடையே நான் ஒரு இணைப்பு பாலமாக செயல்பட்டு வந்துள்ளேன். மேலும் அதே மாதிரி மீண்டும் செயல்படுவேன் என்றும் பான் கூறியுள்ளார். அமெரிக்கா, இங்கிலாந்து, பிரான்ஸ் ஆகிய நாடுகளின் ஆதரவு உள்ளவர்தான் ஐக்கிய நாடுகளின் பொதுச்செயலாளராக வர முடியும். இதை கருத்தில் கொண்டு பான் கீ மூன் செயல்பட்டு வருகிறார். சமீபகாலமாக அமெரிக்கா கூட்டுப்படை எடுத்து வரும் நடவடிக்கைகளுக்கு மூன் பகிரங்க ஆதரவு கொடுத்து வருகிறார். எகிப்து, லிபியா, ஏமன், ஓமன், சிரியா ஆகிய நாடுகளில் அதிபருக்கு எதிராக அமெரிக்க நடவடிக்கைகளுக்கு மூன் ஆலோசனையும் ஆதரவும் அளித்து வருகிறார். எல்லாம் ஆதாயத்திற்காகத்தான்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்1 year 6 months ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்1 year 6 months ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.1 year 6 months ago |


