Idhayam Matrimony

பேருந்து விபத்தில் உயிர் நீத்தவர்களுக்கு வைகோ இரங்கல்

வியாழக்கிழமை, 9 ஜூன் 2011      தமிழகம்
Image Unavailable

சென்னை, ஜூன்.- 9 - வேலூர் அருகே தனியார் பேருந்து கவிழ்ந்து தீப்பிடித்ததில் பலியானவர்களுக்கு ம.தி.மு.க. பொதுச் செயலாளர் வைகோ  இரங்கல் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் விடுத்துள்ள இரங்கல் செய்தியில் கூறியிருப்பதாவது:- வேலூர் மாவட்டம் காவேரிப்பாக்கத்திற்கு அருகில் நடுநிசி வேளையில் ஏற்பட்ட பேருந்து விபத்தில் பயணிகள் பலர் தீயில் கருகி துடிதுடித்து மாண்டனர் என்ற செய்தி அறிந்து தாங்க முடியாத அதிர்ச்சியும் துக்கமும் ஏற்பட்டது. தமிழ்நாட்டில் அதிகமாக சாலை விபத்துக்கள் நாள்தோறும் நடப்பதும் பலர் உயிர் இழப்பதும் மிகுந்த கவலையையும் அச்சத்தையும் ஏற்படுத்துகிறது. சாலைகளில் வாகனங்களைக் கண் மண் தெரியாத வேகத்தில் ஓட்டுவதும் இன்னும் பல்வேறு காரணங்களினாலும் கோரமான விபத்துகள் ஏற்படுகின்றன. இதனைத் தடுப்பதற்கு அரசு உரிய நடவடிக்கைகள் மேற்கொள்ள வேண்டும்.
விபத்தில் உயிர் நீத்தவர்களின் குடும்பத்தினருக்கு ஆழ்ந்த இரங்கலைத் தெரிவிப்பதோடு விபத்தில் சிக்கி சிகிச்சை பெறுகிறவர்கள் பூரண நலமடைய விழைகிறேன்.
இவ்வாறு அவர் இரங்கல் செய்தியில் கூறிப்பிட்டுள்ளார்.
 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 1 week ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 1 week ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 1 month ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 1 month ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 3 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 3 months ago