முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

குற்றாலத்தில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்ட போலீஸாருக்கு அடிஉதை

புதன்கிழமை, 15 ஜூன் 2011      தமிழகம்
Image Unavailable

 

தென்காசி. ஜூன். 15 - குற்றாலத்தில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த போலீஸாரை அடித்து உதைத்த கடையம் பொட்டல்புதூர் பகுதியை சேர்ந்த 7 பேர்களை போலீஸார் கைது செய்தனர். மேலும் அவர்கள் வந்த வேனையும் பறிமுதல் செய்தனர்.

குற்றாலத்தில் சீசன் களைகட்டியுள்ள நிலையில் குற்றாலத்தில் அனைத்து அருவிகளிலும் உல்லாச பயணிகள் கூட்டம் அலை மோதுகிறது. அனைத்து அருவிகளிலும் உல்லாச பயணிகள் கூட்டம் அதிகரித்த வண்ணம் உள்ளது. இந்நிலையில் நேற்று நள்ளிரவு குற்றாலம் ஐந்தருவியில் பாளை ஆயுதப் படை போலீஸ் சண்முகராஜ்(வயது 25) பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தார். அப்போது 

ஐந்தருவிக்கு ஒரு வேனில் வந்த சிலர் கூச்சல் போட்டுள்ளார்கள். அதைப் பார்த்த போலீஸ் 

சண்முகராஜ் அவர்களை கண்டித்துள்ளார். அதன்பின் அவர்கள் ஐந்தருவியில் குளித்து விட்டு 

கிளம்பினார்கள். சண்முகராஜ் பாதுகாப்பு பணியை முடித்து விட்டு அதிகாலை 4 மணிக்கு 

ஐந்தருவியில் இருந்து குற்றாலத்திற்கு வந்துள்ளார். அப்போது ஐந்தருவியில் கூச்சல் போட்டு தகராறு 

செய்த கும்பல் போலீஸ் சண்முகராஜை வழிமறித்து தகராறு செய்துள்ளார்கள். மேலும் அவர்கள் 7 பேர்களும் சேர்ந்து போலீஸ் சண்முகராஜை அடித்து உதைத்துள்ளார்கள். இதில் சண்முகராஜ் பலத்த காயம் அடைந்துள்ளார். 

இதுபற்றி சண்முகராஜ் குற்றாலம் காவல் நிலையத்தில் புகார் செய்தார். குற்றாலம் காவல் நிலைய சப்இன்ஸ்பெக்டர் சிவனு, குற்றாலம் காவல் நிலைய இன்ஸ்பெக்டர் குமரவேல் மற்றும் போலீஸார் விரைந்து வந்து அங்கு நின்று கொண்டிருந்த 7 பேர்களை கைது செய்தனர். மேலும் அவர்களிடம் போலீஸார் விசாரணை நடத்தினார்கள். விசாரணையில் அவர்கள் 7 பேர்களும் நெல்லை மாவட்டம் கடையம் அருகே உள்ள பொட்டல்புதூர்,  முதலியார் பட்டி பகுதியை சேர்ந்தவர்கள் என்பது 

தெரியவந்தது. அவர்கள் பெயர்கள் வருமாறு:- முதலியார் பட்டி முகம்மது காசிம் என்பவரது மகன் இதயத்துல்லா(வயது 22), அதே ஊரை சேர்ந்த முகம்மது ஹாரித் என்பவரது மகன் ஷேக் ஷா(வயது 28) பக்கீர்மைதீன் என்பவரது மகன் பீர்மூகைதீன் (வயது 30) காந்திநகர் பகுதியை சேர்ந்த ஈசக் என்பவரது மகன் ரஜப்(வயது 27) முதலியார் பட்டியை சேர்ந்த முகைதீன் பிச்சையை என்பவரது மகன் ஜியாலூதீன்(வயது 28), இஸ்மாயில்கான் என்பவரது மகன் ஜின்னா முகம்மது (வயது 26) பொட்டல் புதூர் பகுதியை சேர்ந்த முகம்மது அலி என்பவரது மகன் முகம்மது யாசித் (வயது 28) ஆகிய 7 பேர்களையும் கைது செய்ததோடு அவர்கள் வந்த வேனையும் பறிமுதல் செய்தனர். அதன்பின் அவர்கள் 7 பேர்களையும் செங்கோட்டை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினார்கள். நீதிபதி அவர்களை 15 நாட்கள் கஏாவலில் வைக்க உத்தரவிட்டார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony