முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

30-ந் தேதி மருத்துவ கவுன்சிலிங் தொடங்கும்: அமைச்சர்

புதன்கிழமை, 15 ஜூன் 2011      தமிழகம்
Image Unavailable

 

சென்னை, ஜூன்.15 -மருத்துவ கவுன்சிலிங் வருகிற 30-ந் தேதி தொடங்கும் என்று அமைச்சர் விஜய் கூறினார்.​சுகாதார துறை அமைச்சர் டாக்டர் வி.எஸ். விஜய் நேற்று காலை 8.45 மணிக்கு சென்னை அரசு பொது மருத்துவமனைக்கு சென்று திடீர் சோதனை மேற் கொண்டார்.அங்குள்ள ஆண்கள் வார்டு, சிறுnullரக அறுவை சிகிச்சை வார்டு, கட்டண வார்டு, மயக்க மருந்து, சி.டி.ஸ்கேன் பிரிவு, இறப்பை குடலிறக்க வார்டு, எலும்பியல் பிரிவு, தீவிர சிகிச்சை பிரிவு, மாரடைப்பு சிகிச்சை வார்டு உள்பட அனைத்து வார்டுகளுக்கும் சென்று சோதனை மேற்கொண்டார்.

அங்கு சிகிச்சை பெறும் நோயாளிகளிடம் குறை கேட்டார். ஆஸ்பத்திரியின் சமையல் கூடத்துக்கும் சென்று உணவு தயாரிப்பதை பார்வையிட்டார். பால் தரமாக இருக்கிறதா? என்றும் சோதித்தார்.

காலை 10.15 மணி வரை சுமார் 1 1/2 மணி நேரம் அவர் ஆஸ்பத்திரி முழுவதும் சென்று சுற்றிப்பார்த்தார்.இன்று உலக ரத்ததான தினம் என்பதால் அங்கு நடைபெற்ற ரத்ததான முகாமை அமைச்சர் விஜய் தொடங்கி வைத்தார். இதில் மருத்துவ கல்லூரி மாணவர்கள் 100 பேர் ரத்த தானம் வழங்கினர்.

பின்னர் அமைச்சர் விஜய் நிருபர்களிடம் கூறியதாவது:​

முதல்​அமைச்சர் அம்மா ஆணைப்படி தமிழ்நாட்டில் உள்ள அரசு மருத்துவமனை அனைத்திற்கும் சென்று ஆய்வு நடத்தி வருகிறேன். ஒவ்வொரு மாவட்டத்திற்கும் சென்று அங்குள்ள துணை சுகாதார நிலையங்கள், தாலுகா ஆஸ்பத்திரி, மாவட்ட தலைமை ஆஸ்பத்திரி, மருத்துவ கல்லூரி மருத்துவமனைகளுக்கு சென்று அடிப்படை பிரச்சினைகளை கண்டறிந்து முதல்​அமைச்சரிடம் அறிக்கை கொடுப்பேன்.

ஒவ்வொரு ஆஸ்பத்திரியிலும் அடிப்படை வசதிகளை மேம்படுத்த சொல்லி உள்ளதால் இந்த ஆய்வு மேற் கொள்ளப்பட்டுள்ளது. சில ஆஸ்பத்திரிகளில் அடிப்படை பிரச்சினைகளை செய்து தருமாறு கேட்டுள்ளனர். நோயாளிகளிடமும் குறை கேட்டதில் மருந்து, மாத்திரை தட்டுப்பாடின்றி தருவதாக கூறினர். சிகிச்சை முறை நன்றாக உள்ளதாக தெரிவித்தனர்.

கேள்வி:​ மருத்துவ கல்லூரியில் மாணவர்கள் சேர கூடுதல் இடம் கிடைக்குமா?

பதில்:​இந்திய மெடிக்கல் கவுன்சில் அறிக்கையை எதிர்த்து உள்ளோம். அறிக்கை வந்த பிறகு அது பற்றி முடிவெடுக்கப்படும்.

கேள்வி:​ மருத்துவ கவுன்சிலிங் எப்போது நடை பெறும்?

பதில்:​ 21​ந்தேதி கட்​ஆப் மார்க் (தரப்பட்டியல்) வெளியிடப்படும். ஏற்னவே அறிவித்த அட்டவணைப்படி 30​ந்தேதி கவுன்சிலிங் தொடங்கும்.

கேள்வி:​ மதுரை அரசு ஆஸ்பத்திரியில் பிறந்த குழந்தைகளில் சுமார் 100 குழந்தைகள் இதுவரை கடத்தப்பட்டு விற்கப்பட்டுள்ளதே?

பதில்:​ குழந்தைகளை கடத்தியவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க உத்தரவிடப்பட்டுள்ளது அங்குள்ள ஆஸ்பத்திரி டீனுக்கு தகவல் சொல்லி நடைமுறையில் சட்டப்படி என்ன செய்ய முடியுமோ அதை உடனே எடுக்கும்படி உத்தரவிட்டுள்ளோம்.

இவ்வாறு அவர் கூறினார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony