முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

அமைச்சரவை கூட்டத்தை புறக்கணித்த 6 அமைச்சர்கள்

வெள்ளிக்கிழமை, 17 ஜூன் 2011      அரசியல்
Image Unavailable

 

ஐதராபாத், ஜுன் 17 - ஆந்திர அமைச்சரவை கூட்டத்தை தெலுங்கானா பகுதியைச் சேர்ந்த 6 அமைச்சர்கள் நேற்று புறக்கணித்தனர். ஆந்திர அமைச்சரவையின் முக்கிய கூட்டம் அம்மாநில முதல்வர் கிரன்குமார் ரெட்டி தலைமையில் நேற்று ஐதராபாத்தில் கூடியது. இந்த கூட்டத்தை தெலுங்கானா பகுதியைச் சேர்ந்த 6 அமைச்சர்கள் புறக்கணித்தனர். இவர்கள் 6 பேரும் டெல்லியில் தங்கியுள்ளனர். மத்திய அமைச்சர்கள் மற்றும் மூத்த காங்கிரஸ் தலைவர்கள் ஆகியோரை சந்தித்து தெலுங்கானா பிரச்சனை குறித்து இந்த 6 அமைச்சர்களும் பேச்சுவார்த்தை நடத்தி வருகிறார்கள். இதேபோல மத்திய அமைச்சர்களை சந்திப்பதற்காக டெல்லி சென்ற தெலுங்கானா பகுதியைச் சேர்ந்த மேலும் 4 அமைச்சர்கள் அங்கிருந்து திரும்பி ஐதராபாத் வந்தனர். இவர்கள் 4 பேரும் நேற்றைய அமைச்சரவை கூட்டத்தில் பங்கேற்றனர். ஆனால் மற்ற 6 அமைச்சர்கள் மட்டும் அமைச்சரவை கூட்டத்திற்கு வரவேயில்லை. 

இதற்கு முன்பு நடந்த அமைச்சரவை கூட்டத்தைக் கூட சில தெலுங்கானா அமைச்சர்கள் ஏற்கனவே புறக்கணித்துள்ளனர். ஆனால் அதிகமான அமைச்சர்கள் அமைச்சரவை கூட்டத்தை புறக்கணித்தது இதுதான் முதல்முறை என்று கூறப்படுகிறது. ஜனாரெட்டி, பொன்னால லெட்சுமய்யா, கோமதி ரெட்டி வெங்கட் ரெட்டி, ஸ்ரீதர் பாபு, சுதர்ஷன் ரெட்டி, பாசுராஜ் சரய்யா ஆகிய இந்த 6 அமைச்சர்களும் நேற்றைய அமைச்சரவை கூட்டத்தை புறக்கணித்தவர்கள் ஆவார்கள். 

தனி தெலுங்கானா பிரச்சனையில் இன்னும் தெளிவான முடிவு எதையும் அறிவிக்கவில்லை. இதனால் இந்த பிரச்சனைக்கு விரைவில் தீர்வுகாண தெலுங்கானா பகுதியைச் சேர்ந்த மாநில அமைச்சர்கள், எம்.எல்.ஏ.க்கள் ஆகியோர் தீவிரமான நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகின்றனர். அதன் ஒருபகுதியாகத்தான் ஆந்திர அமைச்சர்கள் பலர் அடிக்கடி டெல்லி சென்று மத்திய அமைச்சர்களையும் மூத்த காங்கிரஸ் தலைவர்களையும் சந்தித்து பேசி வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

தீக்காயங்கள் குணமாக | தீப்புண் கொப்பளங்கள் குணமாக | தீப்புண் வடு மறைய | காயம் விரைவில் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 3 weeks ago குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 6 months 1 week ago பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 1 week ago
தொடர் தும்மல் நிற்க | ஜலதோஷம் நீங்க | நீர் கோர்வை குணமாக | சுவாசக்குழாய் அலர்ஜி 7 months 1 week ago மாரடைப்பை தடுக்க | நெஞ்சுவலி குணமாக | இதயம் படபடப்பு நீங்க | இருதயம் பலமடைய 8 months 5 days ago இருமல் குணமாக | இளைப்பு குணமாக | வரட்டு இருமல் | கக்குவான் இருமல் வேகம் குறைய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 5 days ago