முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

சாட்சிகளை கலைத்து விடுவார் கனிமொழி - சி.பி.ஐ.

சனிக்கிழமை, 18 ஜூன் 2011      ஊழல்
Image Unavailable

 

புதுடெல்லி, ஜூன்.18 - ஸ்பெக்ட்ரம் ஊழல் வழக்கில் கனிமொழி எம்.பி.க்கும், கலைஞர் தொலைக்காட்சியின் நிர்வாக இயக்குனர் சரத்குமாருக்கும் ஜாமீன் கொடுக்கக்கூடாது. அவ்வாறு அவர்களை ஜாமீனில் விடுதலை செய்தால் அவர்கள் ஆதாரங்களை அழித்து விடுவார்கள். சாட்சிகளை கலைத்து விடுவார்கள் என்று சுப்ரீம் கோர்ட்டில் சி.பி.ஐ கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளது.

நாட்டுக்கு ரூ.1.76 லட்சம் கோடி இழப்பை ஏற்படுத்திய ஸ்பெக்ட்ரம் ஊழல் தொடர்பாக முன்னாள் அமைச்சர் ஆ.ராசா அவரது தனிச்யெலாளர்கள் உட்பட பலர் கைது செய்யப்பட்டு திகார் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். இந்த ஊழல் தொடர்பாக சில முக்கியநிறுவனங்களின் அதிபர்களும் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். இந்த நிலையில் கலைஞர் டி.வி.க்கு ரூ.200 கோடி கைமாறிய விவகாரம் தொடர்பாக தி.மு.க. எம்.பி.யும் முன்னாள் முதல்வர் கருணாநிதியின் மகளுமான கனிமொழி மற்றும் கலைஞர் டி.வி. யின் நிர்வாக இயக்குனர் சரத்குமாரும் பிறகு கைது செய்யப்பட்டு அவர்களும் டெல்லி திகார் சிறையில் அடைக்கப்பட்டனர். தங்களை ஜாமீனில் விடக்கோரி  இவர்கள் தாக்கல் செய்த மனுவை சி.பி.ஐ சிறப்பு நீதி மன்றம் முதலில் தள்ளுபடி செய்தது. அதன்பிறகு இருவரும் டெல்லி ஐகோர்ட்டில் மனு தாக்கல் செய்தனர். அங்கும் இவர்களது ஜாமீன் மனு தள்ளுபடி செய்யப்பட்ட நிலையில் இருவரும் சுப்ரீம் கோர்ட்டில் அப்பீல் செய்தனர். இவர்களது ஜாமீன் மனு மீதான விசாரணை நேற்று சுப்ரீம் கோர்ட்டில் நடந்தது. அப்போது சுப்ரீம் கோர்ட்டில் சி.பி.ஐ. தரப்பில் ஒரு பிரமாண பத்திரம் தாக்கல் செய்யப்பட்டது. இந்த பதில் மனுவில் கனிமொழிக்கும், சரத்குமாருக்கும் ஜாமீன் கொடுக்க சி.பி.ஐ. கடும் எதிர்ப்பு தெரிவித்தது. தங்களது பிரமாண பத்திரத்தில் சி.பி.ஐ கூறியிருந்ததாவது, கனிமொழிக்கும் சரத்குமாருக்கும் ஜாமீன் கொடுக்கக்கூடாது. அப்படி அவர்களை ஜாமீனில் விடுதலை செய்தால் இருவரும் சாட்சிகளை கலைத்துவிடுவார்கள் ஆதாரங்களையும் அழிக்கக்கூடும். ரூ.200 கோடி கைமாறிய விவகாரத்தில் இருவருமே பிரதான கூட்டுச்சதியாளர்கள். இது அவர்கள் கூறுவதைப்போல் கடன் தொகை அல்ல. லஞ்சப்பணத்தின் ஒரு பகுதி. மேலும் இந்த வழக்கில் விசாரணை முன்னேற்றம் அடைந்துள்ள நிலையில் குற்றவாளிகளுக்கு ஜாமீன் கொடுப்பது முறையாகாது. எனவே இருவருக்கும் ஜாமீன் தரக்கூடாது. இதற்கு முன்பு பல அம்சங்களை ஆராய்ந்த பிறகு தான் சி.பி.ஐ. கோர்ட்டும் சரி, டெல்லி ஐகோர்ட்டும் சரி அவர்களுக்கு ஜாமீன் தர மறுத்துவிட்டன. எனவே சுப்ரீம் கோர்ட்டும் ஜாமீன் தரக்கூடாது . இவ்வாறு புலனாய்வு துறையினர் சுப்ரீம் கோர்ட்டில் வாதிட்டனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 1 week ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 1 week ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 1 month ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 1 month ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 3 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 3 months ago