முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

கல்வி கட்டண விவரங்கள் இணைய தளத்தில் வெளியீடு

சனிக்கிழமை, 18 ஜூன் 2011      தமிழகம்
Image Unavailable

 

சென்னை, ஜூன், 18 - தனியார் பள்ளிகளில் வசூலிக்க வேண்டிய ரவிராஜ பாண்டியன் குழுவின் கல்வி கட்டண விவரங்கள், தமிழக அரசின் இணைய தளம் மற்றும் பள்ளிக்கல்வி இணையதளம் ஆகியவற்றில் வெளியிடப்பட்டுள்ளது. தமிழகத்தில் தனியார் பள்ளிகளுக்கான கல்வி கட்டணம் குறித்து நீதிபதி கோவிந்தராஜன் குழு விசாரித்து பட்டியல் வெளியிட்டது. ஆனால், இந்த கட்டணம் போதாது, இந்த கட்டணத்தை கொண்டு நாங்கள் பள்ளியை நடத்த முடியாது, ஆசிரியர்களுக்கு சரியான சம்பளம் வழங்க முடியாது என எதிர்ப்பு தெரிவித்து சென்னை ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்தன.

இதன் பிறகு தமிழக அரசு நீதிபதி ரவிராஜபாண்டியன் தலைமையில் குழு அமைத்து  விசாரணை மேற்கொண்டது. இதனைத்தொடர்ந்து தனியார் பள்ளிகளுக்கு நீதிபதி ரவிராஜபாண்டியன் கமிட்டி புதிய கல்வி கட்டணத்தை நிர்ணயம் செய்தது. தமிழ்நாடு முழுவதும் உள்ள 6,355 பள்ளிகளுக்கு அந்தந்த பள்ளிகளின் கட்டமைப்பு வசதிகளுக்கு ஏற்ப இந்த கல்வி கட்டணம் நிர்ணயம் செய்யப்பட்டது.

ரூ.3 ஆயிரம் முதல் ரூ.21 ஆயிரம் வரை கட்டணம் அறிவிக்கப்பட்டது. மறுகட்டணம் நிர்ணயத்தை சில தனியார் பள்ளிகள் ஏற்றுக்கொள்ளவில்லை. இந்த கட்டணம் போதாது என்று மேல்முறையீடு செய்யப்போவதாகவும் தெரிவித்தன.

தனித்தனியாக ஒவ்வொரு பள்ளிகளுக்கும் கட்டணம் குறித்த பட்டியல் கடந்த இரு தினங்களுக்கு முன்பாக வழங்கப்பட்டது. அந்த பட்டியலை பெற்ற பள்ளிகள் அதன் விவரங்களை மாணவர்கள், மற்றும் பெற்றோர்கள் தெரிந்துகொள்ளும் வகையில் பெயர் பலகையில் ஒட்டவேண்டும். ஆனால், பெரும்பாலான பள்ளிகள் இதனை பின்பற்றவில்லை.

அதனால் மாணவர்களுக்கு  வசதியாக கட்டண விவரங்களை தமிழக அரசின் இணையதளத்தில் நேற்று வெளியிடப்பட்டது. 6,355 பள்ளிகளுக்கான கட்டண விவரங்களும் இதில் இடம் பெற்றுள்ளது.  சூசூசூ.சிடூ.கிச்சு.டுடூ., சூசூசூ.ஙீஹங்ங்டுகூஹங்சுடு.டுடூ  என்ற அரசின் இணைய தளங்களில் இந்த விவரங்களை தெரிந்துகொள்ளலாம் என கூறப்பட்டுள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 1 week ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 1 week ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 1 month ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 1 month ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 3 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 3 months ago