முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

மத்திய பல்கலை.யில் பி.சி. மாணவர்களுக்கு இட ஒதுக்கீடு

ஞாயிற்றுக்கிழமை, 3 ஜூலை 2011      இந்தியா
Image Unavailable

 

புது டெல்லி,ஜூலை.3 - மத்திய பல்கலைக் கழங்கள், மத்திய கல்வி நிறுவனங்களில் பிற்படுத்தப்பட்ட மாணவர்களுக்கு 27 சதவீத இட ஒதுக்கீடு செய்யும் விஷயத்தில் அரசியல் சாசன பெஞ்ச் ஏற்கனவே தெளிவான விளக்கம் அளித்துள்ளது என்று சுப்ரீம் கோர்ட் கூறியுள்ளது. 

மத்திய பல்கலைக்கழகங்களில் பி.சி. மாணவர்களுக்கு 27 சதவீத இட ஒதுக்கீடு வழங்குவது தொடர்பான மனு சுப்ரீம் கோர்ட் விடுமுறை கால நீதிபதிகள் பெஞ்ச் முன் விசாரணைக்கு வந்தது. அப்போது இந்த விஷயம் குறித்து 5 நீதிபதிகள் அடங்கிய பெஞ்ச் 2008 ம் ஆண்டிலேயே விளக்கமளித்து விட்டது. பி.சி. மாணவர்களுக்கான கட் ஆப் மார்க் குறித்தும் அதில் கூறப்பட்டுள்ளது. எனவே இந்த விஷயத்தில் அந்த தெளிவான விளக்கத்தையும் தாண்டி செல்ல வேண்டியதுள்ளது. 

எனினும் கோடை விடுமுறை முடிந்து நீதிமன்றம் மீண்டும் வரும் 4 ம் தேதி செயல்படும் போது நீதிபதி ஆர்.வி. ரவீந்திரன் தலைமையிலான பெஞ்சின் விசாரணைக்கு விட்டு விடுகிறோம் என்றனர். மத்திய கல்வி நிறுவனங்களில் பொதுவான கட் ஆப் மதிப்பெண்ணை விட 10 மதிப்பெண் குறைவாக இருப்பதே பி.சி. மாணவர்களுக்கு போதுமானது என்ற டெல்லி ஐகோர்ட்டின் தீர்ப்பை எதிர்த்து தாக்கல் செய்யப்பட்ட மனுவை அந்த பெஞ்ச் விசாரித்து வருவது குறிப்பிடத்தக்கது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!