முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ஓரின சேர்க்கை ஒரு பெரும் நோய் மத்தியமந்திரி குலாம்நபி எச்சரிக்கை

புதன்கிழமை, 6 ஜூலை 2011      இந்தியா
Image Unavailable

 

புதுடெல்லி,ஜூலை.- 6 - ஓரின சேர்க்க ஒரு பெரும் நோய் என்றும் இதை தடுக்க மத்திய சுகாதாரத்துறை நடவடிக்கை எடுத்து வருகின்றது என்றும் மத்திய சுகாதார்த்துறை அமைச்சர் குலாம் நபி ஆசாத் கவலைபட கூறியுள்ளார்.  டெல்லியில் உள்ள பிரபலமான விஞ்ஞான் பவனில் எய்ட்ஸ் நோய் தடுப்பு வழிமுறைகள் பற்றி ஆய்வு செய்ய ஒரு மாநாடு நடைபெற்றது. இந்த கருத்தரங்கில் மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் குலாம் நபி ஆசாத் கலந்துகொண்டு பேசினார். அப்போது அவர் கூறியதாவது:-

ஓரின சேர்க்கையானது பெரும் நோயாகும். ஓரின சேர்க்கையானது இயற்கைக்கு மாறானது. அப்படி இருந்தும் இந்தியாவில் ஓரின சேர்க்கையால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. ஆணுக்கு ஆண் உடல் உறவு கொள்வதுதான் ஓரின சேர்க்கையாகும். இந்த முறை மேற்கத்திய நாடுகள் மற்றும் ஐரோப்பா நாடுகளில்தான் அதிக அளவு இருந்தது. தற்போது இந்தியாவிலும் அதிகம் பரவ தொடங்கிவிட்டது. இதனால் ஏராளமானோர் பாதிக்கப்பட்டுள்ளனர். இதை தடுத்து நிறுத்த மிகப்பெரிய அளவில் சிகிச்சை அளிக்க வேண்டும். நாட்டில் அழகிகளை (செக்ஸ் தொழிலில் ஈடுபடுபர்கள்) எளிதாக கண்டுபிடித்து அவர்களை நல்வழிக்கு கொண்டு வருவது அதிகரித்து வருகிறது. ஆனால் ஓரின சேர்க்கையில் ஈடுபடுபவர்களை கண்டுபிடித்து அதை அடுத்து நிறுத்துவது என்பது பெரிய சிரமமாக உள்ளது. 

நாட்டில் எய்ட்ஸ் நோயை ஒழிக்க செக்ஸ் கல்வி வெளிப்படையாக இருக்க வேண்டும். மேற்கத்திய நாடுகளில் செக்ஸ் கல்வி நல்ல முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது. ஆனால் நம் நாட்டில் செக்ஸ் குறித்து பேசக்கூட கட்டுப்பாடு விதிப்பது ஓரின சேர்க்கையையும் எய்ட்ஸ் நோயையும் அதிகரிக்கிறது.  ஆசாத் இவ்வாறு கூறினார். மிகப்பெரிய அளவில் நடைபெற்ற இந்த மாநாட்டில் பிரதமர் மன்மோகன் சிங், சோனியா காந்தி, மத்திய அமைச்சர்கள், மாநில முதல்வர்கள் பாராளுமன்ற எம்.பி.க்கள் ஆகியோர் உள்பட ஏராளமானோர் கலந்துகொண்டனர். மாநாட்டிற்கான ஏற்பாடுகளை பாராளுமன்ற எம்.பி.க்கள் செய்திருந்தனர். 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்