முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ஊழல் அதிகரிப்புக்கு காரணம் குடும்ப ஆட்சியே: ராஜ்நாத் சிங்

வெள்ளிக்கிழமை, 8 ஜூலை 2011      ஊழல்
Image Unavailable

லக்னோ,ஜூலை.8 - நாட்டில் லஞ்சம் லாவணம்யம், ஊழல் தலைவிரித்தாடுவதற்கு முக்கிய காரணம் குடும்ப ஆட்சியே என்று பாரதிய ஜனதா கட்சியின் மூத்த தலைவர் ராஜ்நாத் விலாவாரியாக விவரித்துள்ளார். பாரதிய ஜனதா கட்சியின் மூத்த தலைவரும் கட்சியின் முன்னாள் தேசிய தலைவருமான ராஜ்நாத் சிங் நேற்று லக்னோவில் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறுகையில் நாட்டில் லஞ்ச லாவண்யம், ஊழல் தலைவிரித்தாடுவதற்கு குடும்ப ஆட்சிதான் முக்கிய காரணமாகும். நாட்டில் குடும்ப ஆட்சியை மக்கள் நிராகரிக்காவிட்டால் ஊழலையும் லஞ்சத்தையும் கட்டுப்படுத்தி ஒழிக்க முடியாது என்றார். ஒரே தலைவர், ஒரே குடும்ப ஆட்சி என்பதை தடுத்து நிறுத்த வேண்டும். நாட்டில் தற்போது நிலவும் சூழ்நிலையை பார்க்கும்போது பலமான லோக்பால் மசோதா வேண்டும். பலமான லோக்பால் மசோதாவை பாரதிய ஜனதா ஆதரிக்கிறது. லோக்பால் மசோதா பலமாக இருந்தால்தான் அரசின் மேல்மட்டத்தில் நடக்கும் ஊழலை ஒழிக்க முடியும் என்றும் ராஜ்நாத் கூறினார். ஒரே தலைவர், ஒரே குடும்ப ஆட்சியின் ஆதிக்கம் இருக்கும் வரை ஊழலை தடுத்து நிறுத்த முடியாது. குடும்ப ஆட்சியை ஒழிக்க மக்களிடம் விழிப்புணர்வை ஏற்படுத்துவதோடு மக்கள் பிரதிநிதித்துவ சட்டத்தில் திருத்தம் கொண்டுவர வேண்டும் என்று ஆலோசனை கூறினார். கடந்த 1970-ம் ஆண்டில் இருந்து நாட்டில் ஒரே குடும்ப ஆட்சி மற்றும் ஒரே தலைவன் என்ற முறை அதிகரித்து வருகிறது. அதேசமயத்தில் அதே காலக்கட்டத்தில் ஊழல், லஞசம், முறைகேடுகளும் அதிகரித்தே வருகிறது என்று எந்த அரசியல் கட்சியையும் குறிப்பிடாமல் ராஜ்நாத் சிங் கூறினார். ஒரே குடும்ப ஆட்சி நடந்ததால்தான் ரூ.1 லட்சத்து 76 ஆயிரம் கோடி 2ஜி ஸ்பெக்ட்ரம் ஊழல் நடந்துள்ளது. இது உலகத்திலேயே மிகப்பெரிய ஊழலாகும் என்றும் ராஜ்நாத் சிங் மேலும் கூறினார். 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!