எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
புதுடெல்லி,ஜூலை.- 9 - தெற்கு சூடான் சுதந்திர தின விழாவில் கலந்துகொள்வதற்காக இந்திய துணை ஜனாதிபதி ஹமீத் அன்சாரி அங்கு புறப்பட்டு சென்றார். சூடான் நாட்டில் இருந்து தங்களுக்கு சுதந்திரம் வேண்டும் கோரி தெற்கு சூடான் பகுதி மக்கள் கடந்த 20 ஆண்டுகளாக போராடி வந்தனர். இதன் விளைவாக கடந்த 2005-ம் ஆண்டு சூடான் இரண்டு நாடுகளாக பிரிய ஒப்பந்தம் ஏற்பட்டது. அதன்படி வடக்கு சூடான் என்றும் தெற்கு சூடான் என்றும் பிரிந்தது. அப்போது அமெரிக்க அதிபராக இருந்த ஜார்ஜ் டபுள்யூ புஷ், வெளியுறவு அமைச்சராக இருந்த காலின் பவல் ஆகியோர்களின் முயற்சியால் தெற்கு சூடான் உதயமாகியது. தெற்கு சூடானின் சுதந்திர தினம் இன்று கொண்டாடப்படுகிறது. தலைநகர் ஜூபாவில் இந்த விழா நடக்கிறது. இதில் கலந்துகொள்ளும்படி இந்தியாவுக்கு அழைப்பு விடப்பட்டிருந்தது. இந்த அழைப்பை ஏற்று தெற்கு சூடான் தலைநகர் ஜூபாவில் இன்று நடக்கும் சுதந்திர தின விழாவில் துணை ஜனாதிபதி அன்சாரி கலந்துகொள்கிறார். உலகில் ஆயில் வள நாடுகளில் தெற்கு சூடானும் ஒன்றாகும். உலகத்தில் 193-வது நாடா உதயமாகியிருக்கும் தெற்கு சூடானுடன் முதன் முதலில் தூதரக உறவை ஏற்படுத்திய நாடு இந்தியாதான் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த பயணத்தின்போது உகண்டா அதிபர் யோவெரி முசேவேனியை அன்சாரி கம்பாலா நகரில் சந்தித்து பேசுகிறார். சூடானுன் எரிபொருள் துறையில் உறவை வலுப்படுத்தப்படும். உலகின் இதர நாடுகளில் இருந்து நாம் எரிசக்தியைத்தான் அதிக அளவில் எதிர்பார்த்துக்கொண்டியிருக்கிறோம் என்றும் விமானத்தில் செல்லும்போது நிருபர்களுக்கு அன்சாரி பேட்டி அளிக்கையில் தெரிவித்தார்
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்1 year 3 months ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்1 year 3 months ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.1 year 4 months ago |
-
இன்றைய பெட்ரோல்-டீசல் விலை நிலவரம் –16-01-2026
16 Jan 2026


