முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

கல்கா ரயில் விபத்தில் பலி 70 ஆக உயர்வு

திங்கட்கிழமை, 11 ஜூலை 2011      இந்தியா
Image Unavailable

பதக்பூர்,ஜூலை.12 - கல்கா மெயில் விபத்தில் பலியானவர்களின் எண்ணிக்கை 70 ஆக உயர்ந்துள்ளது. நொறுங்கிப்போன ரயில் பெட்டிகளில் சிக்கிக்கிடப்பவர்களை மீட்கும் பணி தொடர்ந்து நடக்கிறது. அதனால் பலியானவர்களின் எண்ணிக்கை மேலும் அதிகரிக்கும் என்று தெரிகிறது. மேலும் ரயில் விபத்தில் பலியானவர்களின் எண்ணிக்கையும் 250 ஆக அதிகரித்துள்ளது. மேற்குவங்காள மாநிலம் ஹவுராவில் இருந்து அரியானா மாநிலத்தில் உள்ள கல்கா நகருக்கு நேற்றுமுன்தினம் மெயில் ரயில் பயணிகளுடன் மணிக்கு 108 கிலோ மீட்டர் வேகத்தில் சென்றுகொண்டியிருந்தது. ரயிலான நேற்றுமுன்தினம் மதியம் சரியாக 12.15 மணியளவில் உத்திரப்பிரதேச மாநிலத்தில் உள்ள பதேபூர் அருகே வேகமாக வந்துகொண்டியிருந்தது. அப்போது ரயில் திடீரென்று தடம்புரண்டது. ரயில் வேகமாக வந்துகொண்டியிருந்ததால் ரயில் பெட்டிகள் ஒன்றுக்கொன்று மோதி மேலேயும் கிழேயும் நொறுங்கிக்கிடந்தன. மொத்தம் 15 பெட்டிகள் தடம்புரண்டு உருக்கொலைந்து கிடந்தன. அதில் சிக்கி நசுங்கிய பயணிகளில் 38 பேர் பலியானார்கள் என்று முதலில் அறிவிக்கப்பட்டது. ஆனால் மீட்புப்பணி முடிவடையாமல் தொடர்ந்து நடந்து கொண்டியிருந்ததால் பலி எண்ணிக்கை அதிகரித்தது. நேற்று மட்டும் 32 பேர் உடல்கள் மீட்கப்பட்டன. இதை சேர்ந்து பலியானவர்களின் எண்ணிக்கை 70 ஆக உயர்ந்தது. காயம் அடைந்தவர்களின் எண்ணிக்கையும் 250 ஆக உயர்ந்தது. காயம் அடைந்தவர்கள் பதேபூர், கான்பூர் மற்றும் பல நகரங்களில் உள்ள அரசு மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். மீட்புப்பணி தொடர்ந்து நடந்து வருவதால் பலி எண்ணிக்கை மேலும் அதிகரிக்கும் என்று அஞ்சப்படுகிறது. பலியானவர்களில் 14 பெண்களும் அடங்கும். மேலும் சுவீடன் நாட்டை சேர்ந்த 2 பேர் பலியாகிவிட்டனர். அதில் ஒருவரின் உடல் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. மற்றொருவரின் உடல் நேற்று பிற்பகல் வரை கண்டுபிடிக்கப்பட முடியவில்லை.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!