எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
மும்பை,ஜூலை.12 - அதிகரித்து வரும் பெண் சிசுக் கொலையை தடுக்க மகராஷ்டிரா அரசு திட்டமிட்டுள்ளது. மகராஷ்டிரா மாநிலத்தில் 2011 ம் ஆண்டில் எடுக்கப்பட்ட மக்கள் தொகை கணக்கெடுப்பின் படி பெண் குழந்தைகளின் விகிதாச்சாரம் மிகவும் குறைந்துள்ளது. ஆயிரம் ஆண் குழந்தைகளுக்கு 683 பெண் குழந்தைகளே உள்ளனர். குறிப்பாக பீட் மாவட்டத்தில் இது மிகவும் குறைந்து காணப்படுகிறது. குழந்தைகள் கருவில் இருக்கும் போதே அவற்றின் பால் தன்மையை கண்டுபிடிக்கும் கரு முன்னறி சோதனை மகராஷ்டிர மாநிலத்தில் அதிகமாக காணப்படுவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இவற்றை கருத்தில் கொண்டே மகராஷ்டிரா அரசு பெண் சிசுக் கொலையை தடுக்கும் நோக்கத்தில் பெண் குழந்தைகளை காப்போம் என்ற திட்டத்தை தொடங்கவுள்ளது.
உலக மக்கள் தொகை தினமான நேற்று முதல் இந்த திட்டம் துவங்க உள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர். மகராஷ்டிர முதல்வர் பிருத்விராஜ் சவான் இது தொடர்பான கண்காட்சி ஒன்றை திறந்து வைக்கவுள்ளதாகவும், ஆம்சிமுல்கி என்ற இணைய தளத்தையும் தொடங்கி வைக்கவுள்ளதாகவும் அதிகாரிகள் தெரிவித்தனர். மத்திய அரசும் கருவில் உள்ள குழந்தைகளின் பால் தன்மையை அறியும் கரு முன்னறி சோதனையை தடை செய்யும் 1994 ம் ஆண்டின் பாலின தேர்வு தடை சட்டத்தை கடுமையாக அமல்படுத்தும்படி மகராஷ்டிரா அரசை வலியுறுத்தி உள்ளது.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்1 year 3 months ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்1 year 3 months ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.1 year 4 months ago |


