முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

தகவல் அறியும் உரிமை சட்டம்: ஐகோர்ட் அதிரடி தீர்ப்பு

புதன்கிழமை, 13 ஜூலை 2011      தமிழகம்
Image Unavailable

 

சென்னை, ஜூலை.14 - தகவல் அறியும் உரிமை சட்டத்திலிருந்து ஐ.ஏ.எஸ். அதிகாரிகளுக்கு விதிவிலக்கு அளிக்க முடியாது என்று ஐகோர்ட் பரபரப்பு தீர்ப்பை வழங்கி உள்ளது. தகவல் அறியும் உரிமை சட்டம் வந்ததிலிருந்து பல்வேறு தகவல்கள் பொதுமக்கள் பெற முடிந்தது. கேட்கும் தகவல்களை தர மறுக்கும் துறை சார்ந்தவர்களுக்கு அபராதம் மற்றும் தண்டனை விதிக்கும் முறையால் பொதுமக்களுக்கு பல மறைந்து கிடக்கும் உண்மைகள் வெளியே வந்தது. தகவல் அறியும் உரிமை சட்டத்தின் கீழ் எம்.பி.க்கள்,  எம்.எல்.ஏ.க்கள் சொத்துக் கணக்குகளை கேட்டு பெறுவது போல் ஐ.ஏ.எஸ். அதிகாரிகள் சொத்து கணக்குகளை தர வேண்டும் என்று கேட்டு மாதவன் என்கிற சமூக ஆர்வலர் வழக்கு தொடர்ந்திருந்தார். 

இதன் மீதான தீர்ப்பு நேற்று சென்னை உயர்நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது. நீதிபதிகள் பி.முருகேசன், கே.கே.ஸ்ரீதரன் முன்பு விசாரணைக்கு வந்தது. நீதிபதிகள் தனது தீர்ப்பில் ஐ.ஏ.எஸ். அதிகாரிகள் தங்கள் சொத்து விபரங்களை தகவல் அறியும் உரிமை சட்டத்தின்படி வெளியிட வேண்டும். அதற்கு ஐ.ஏ.எஸ். அதிகாரிகள் விதிவிலக்கல்ல. அவர்களும் மக்கள் ஊழியர்களே என்று தீர்ப்பளித்துள்ளனர். இதன் மூலம் ஐ.ஏ.எஸ். அதிகாரிகள் தங்கள் சொத்துக்களை வெளியிட வேண்டிய கட்டாயத்துக்கு ஆளாக்கப்பட்டுள்ளனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 2 weeks ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 2 weeks ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 1 month ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 1 month ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 3 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 3 months ago