முக்கிய செய்திகள்

குண்டு வெடிப்பு விசாரணையில் உதவ தயார்: அமெரிக்கா

சனிக்கிழமை, 16 ஜூலை 2011      இந்தியா
Image Unavailable

 

வாஷிங்டன், ஜூலை16 - மும்பை தொடர் குண்டு வெடிப்பு விசாரணையில் இந்தியாவுக்கு உதவி  வழங்க தயாராக இருப்பதாக அமெரிக்க வெள்ளை மாளிகை அறிவித்துள்ளது.

மும்பையில் கடந்த 13-ம் தேதி ஜாவேரி பஜார், தாதர், ஓபராஹவுஸ் ஆகிய 3 இடங்களில் அடுத்தடுத்து குண்டுகள் வெடித்தன. இதில் இதுவரை 22 பேர் பலியாகியுள்ளனர். 100 க்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்துள்ளனர். இந்த சம்பவத்திற்கு அமெரிக்கா உள்ளிட்ட பல உலக நாடுகள் கடும் கண்டனம் தெரிவித்துள்ளன.

இந்த நிலையில் இந்த சம்பவம் தொடர்பான விசாரணையில் உதவி அளிக்க தாங்கள் தயாராக இருப்பதாக அமெரிக்கா அறிவித்துள்ளது.

மும்பை தீவிரவாத தாக்குதல் குறித்து இந்திய அரசாங்கம் விசாரணை நடத்தி வருகிறது.  என்றாலும் இந்த விசாரணையில் உதவி செய்ய அமெரிக்கா தயாராக இருக்கிறது. எங்களால் எந்த அளவுக்கு இந்த உதவியை செய்ய முடியுமோ அந்த அளவுக்கு இந்த உதவியை செய்வோம் என்று வாஷிங்டனில் வெள்ளை மாளிகை பத்திரிகை செய்தி தொடர்பாளர் ஜாய் கார்னி தெரிவித்தார்.

ஆனால் இந்த மும்பை தாக்குதலுக்கு யார் காரணம் என்பது குறித்து தங்களுக்கு தகவல் எதுவும் இது வரை கிடைக்கவில்லை என்றும் அவர் கூறினார்.

இதை ஷேர் செய்திடுங்கள்: