முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

பிரபல ஹாலிவுட் நடிகை ஜெனிபர் லோபஸ் விவாகரத்து

திங்கட்கிழமை, 18 ஜூலை 2011      உலகம்
Image Unavailable

 

லாஸ்ஏஞ்சல்ஸ்,ஜூலை 18- பிரபல ஹாலிவுட் நடிகை ஜெனிபர் லோபஸ் தனது கணவர் மார்க் அந்தோணியை விவாகரத்து செய்தார். கடந்த 1986-ம் ஆண்டு ஹாலிவுட் திரைப்படங்களில் நடித்து புகழ் பெற்றவர் ஜெனிபர் லோபஸ் . இவர் நடித்த அனகோண்டா ஆங்கில திரைப்படம்  கடந்த 1997 ல் உலகம் முழுவதும் பெரும் புகழ் பெற்றது. இதை அடுத்து ஜெனிபர் லோபசுக்கு செல்வாக்கு அதிகரித்தது. இவர் திரைப்படங்களில்  நடித்துக்கொண்டே பாப் இசையிலும்  சக்கை போடு போட்டார். இவரது கவர்ச்சி  நடனத்துடன் கூடிய இசை ஆல்பங்களுக்கு உலகம் முழுவதும் பெரும் வரவேற்பு கிடைத்தது.

ஏற்கனவே இரண்டு முறை திருமணம் செய்து  விவாகரத்து பெற்ற ஜெனிபர் லோபஸ்  கடந்த 2004 ம் ஆண்டு மார்க் அந்தோணி என்பவரை திருமணம் செய்து கொண்டார். 

கடந்த 7 வருடங்களாக மகிழ்ச்சியுடன் குடும்பம் நடத்தி வந்த இவர்களுக்குள் திடீர் என்று பிரச்சினை ஏற்பட்டது. இந்த பிரச்சினைக்கு விவாகரத்துத்தான் ஒரே வழி என்று கருதிய ஜெனிபர் லோபசும், மார்க் அந்தோணியும் விவாகரத்து  செய்வது என முடிவு செய்தனர். அதன்படி இவர்கள் முறைப்படி விவாகரத்து பெற்றனர்.

தங்களது  பிரச்சினைகளுக்கு தீர்வு காண தாங்கள் விவாகரத்து செய்வதென முடிவுக்கு வந்ததாகவும் அதன் அடிப்படையில் விவாகரத்து பெற்று சுமூகமாக பிரியாவிடை பெற்றுக்கொள்வதாகவும் இவர்கள் இருவரும் இணைந்து வெளியிட்டுள்ள ஒரு  செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.  ஜெனிபர் லோபசுக்கு தற்போது இரண்டு குழந்தைகள் உள்ளனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!