முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

இந்திய உணவு கழகத்திற்கு ரூ.485 கோடி இழப்பு

புதன்கிழமை, 2 மார்ச் 2011      ஊழல்
Image Unavailable

புதுடெல்லி,மார்ச். -2 - கிட்டங்கிகளில் வைக்கப்பட்டிருக்கும்போது உணவு தானியங்கள் கெட்டுவிடுவதால் இந்திய உணவு கழகத்திற்கு 2010-2011-ம் ஆண்டில் ரூ. 484.76 கோடி இழப்பு ஏற்பட்டுள்ளது என்று பாராளுமன்றத்தில் மத்திய அரசு தெரிவித்துள்ளது.இந்திய உணவு கழக கிட்டங்கிகளில் உணவு தானியங்கள் சேமித்து வைக்கப்படுகின்றது. சேமிப்பு வசதி போதுமானதாக இல்லாததால் இருப்பு வைக்கப்படும் தானியங்களில் ஒரு பகுதி கெட்டு விடுகிறது. மேலும் சரியானபடி உலரவைக்காமல் சேமித்து வைப்பதாலும் உணவு தானியம் கெட்டுவிடும். இந்தமாதிரி உணவு கிட்டங்கிகளில் தானியங்களை இருப்பு வைத்திருக்கும்போது கெட்டுவிடுவதாலும் அவைகளை எடுத்துச்செல்லும்போதும் சேதாரம் ஏற்படுவதாலும் இந்திய உணவு கழகத்திற்கு 2010-2011-ம் ஆண்டில் ரூ. 484.76 கோடி இழப்பு ஏற்பட்டுள்ளது என்று மத்திய உணவு மற்றும் பொது விநியோகத்துறை அமைச்சர் கே.வி. தாமஸ் நேற்று லோக்சபையில் தெரிவித்தார். இந்திய உணவு கழகம்தான் உணவு தான்யங்களை கொள்முதல் செய்து அதை விநியோகம் செய்கிறது. கடந்த ஜனவரி 2011-வரை இந்திய உணவு கழக கிட்டங்கிகளில் வைக்கப்பட்டிருந்த உணவு தானியத்தில் 6 ஆயிரத்து 348 டன் தான்யம் கெட்டுவிட்டது என்று உறுப்பினர்களின் கேள்விகளுக்கு எழுத்து மூலமாக பதில் அளிக்கையில் அமைச்சர் தாமஸ் கூறினார். இந்தாண்டில் இதுவரை முறைகேடு மற்றும் ஊழல் சம்பந்தமாக இந்திய உணவு கழகமானது116 வழக்குகளை போட்டுள்ளது என்றும் அமைச்சர் தாமஸ் மேலும் கூறினார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony