முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

முதல்வர் ஜெயலலிதாவுடன் ஹிலாரி இன்று சந்திப்பு

புதன்கிழமை, 20 ஜூலை 2011      அரசியல்
Image Unavailable

சென்னை, ஜூலை.20 -  தமிழக முதல்வர் ஜெயலலிதாவை இன்று ஹிலாரி கிளிண்டன் சந்திக்கிறார். அமெரிக்கா வெளியுறவு துறை அமைச்சர் ஹிலாரி கிளிண்டன் நேற்று முன்தினம் டெல்லி வந்தார். அவர் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் சிவசங்கர் மேனனை சந்தித்து பேசினார். பின்னர் பிரதமர் மன்மோகன்சிங், சோனியா காந்தி, அமைச்சர் பிரனாப் முகர்ஜி, சுஷ்மா சுவராஜ் ஆகியோரையும் சந்தித்து பேசினார். 

ஹிலாரி கிளிண்டன் டெல்லி இருந்து இன்று சென்னை வருகிறார். சில நிகழ்ச்சிகளில் கலந்து கொள்கிறார். இன்று பகலில் தலைமை செயலகத்தில் தமிழக முதல்வர் ஜெயலலிதாவை ஹிலாரி கிளிண்டன் மரியாதை நிமித்தமாக சந்திக்கின்றார் என்றாலும், இந்த பேச்சுவார்த்தையின் போது தமிழகத்தில் அமெரிக்கா நிறுவனங்கள் செய்யபோகும் முதலீடுகள் மற்றும் பரஸ்பர விஷயங்கள் குறித்து இருவரும் பேசுவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. 

முதல்வர் ஜெயலலிதாவுடன் ஹிலாரி கிளிண்டனின் சந்திப்பு மிகவும் முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது. 

அவரவது வருகையெட்டி சென்னை கோட்டையில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.  முதல்வரிடன் சந்திப்புக்கு பிறகு திருவான்யூரிலுள்ள கலாசேத்ராவுக்கு ஹிலாரி கிளிண்டன் செல்கிறார். உழைக்கும் மகளிர் கூட்டமைப்பு நிகழ்ச்சியிலும் கலந்து கொள்கிறார். மேலும், கோட்டூர்புரம் அண்ணா நூற்றாண்டு விழா நூலகத்தில் நடைபெறும் கூட்டத்தில் மாணவர்கள் மற்றும் முக்கிய பிரமுகர்கள் மத்தியில் உரையாற்றுகிறார். இதற்கிடையே அவர் மகாபலிபுரம் சென்று வருவதற்கும் வாய்ப்புள்ளது.

சென்னை சுற்றுப்பயணத்தை முடித்து கொண்டு ஹிலாரி கிளிண்டன், நாளை காலை இந்தோனேஷியா புறப்பட்டு செல்கிறார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!