முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

பீகாரில் நில மோசடி: விசாரணை நடத்த நிதிஷ் உத்தரவு

புதன்கிழமை, 20 ஜூலை 2011      இந்தியா
Image Unavailable

 

பாட்னா.ஜூலை. 20 - பீகார் மாநலத்தில் நில மோசடிகள் குறித்த புகார்கள் மீது விசாரணை நடத்த அம்மாநில முதல்வர் நிதீஷ் குமார் உத்தரவிட்டுள்ளார். பீகார் மாநிலத்தில் முதல்வர் நிதீஷ் குமார் தலைமையின் கீழ் ஐக்கிய ஜனதாதளம் மற்றும் பாரதீய ஜனதா கட்சிகளின்  கூட்டணி ஆட்சி நடைபெற்று வருகிறது. 

இந்த கூட்டணி கட்சிகளை சேர்ந்த தலைவர்களின் மகன் மற்றும் மகள்களுக்கு தொழில் பேட்டை  நிலங்கள் மோசடியான முறையில் ஒதுக்கீடுகள்  செய்யப்பட்டுள்ளன என்று பீகார் சட்டமன்றத்தில்  எதிர்க்கட்சி தலைவர் அப்துல் பாரி சித்திக் ( ராஷ்ட்ரிய ஜனதா தளம் ) குற்றம்சாட்இடனார். இதனால் இந்த விவகாரம் பீகார் மாநிலத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ஆளும் கூட்டணி கட்சியை சேர்ந்த தலைவர்களே இது போன்று தங்களுக்கு வேண்டியவர்களுக்கு  நிலத்தை மோசடியான முறையில் ஒதுக்கீடு  செய்துள்ளனர் என்றும் சித்திக் குற்றம்சாட்டினார்.

இதை அடுத்து இந்த புகார்கள் குறித்து விசாரணை நடத்த உத்தரவிட்டுள்ளதாக முதல்வர் நிதீஸ் குமார் தெரிவித்துள்ளார்.

தலைமை செயலாளர் தலைமையில் இந்த விசாரணை நடைபெறும் என்றும் இந்த விசாரமையில் குற்றச்சாட்டுகள் நிரூபிக்கப்பட்டால் அவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அவர்  கூறினார்.

தான் சுத்தமான ஆட்சியை நடத்தி வுரவதாகவும் அந்த ஆட்சிக்கு களங்கம் ஏற்படுத்தும் வகையில்  யார் செயல்பட்டாலும் அவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அவர் கூறினார்.

இந்த விசாரணை அறிக்கை வரும் வரை இந்த பிரச்சினை குறித்து தான் எதுவும் சொல்ல  விரும்பவில்லை என்றும் அவர் கூறினார்.

ஆளும் கூட்டணியை சேர்ந்தவர்களின் குடும்பத்தினருக்கு அரசு நிலங்கள் அடி மாட்டு விலைக்கு விற்கப்பட்டுள்ளதாக எதிர்க்கட்சிகள் குற்றம்சாட்டி வருகின்றன. எதிர்க்கட்சிகளின் கோரிக்கை வலுத்ததை அடுத்தே இந்த விசாரமைக்கு முதல்வர் நிதீஷ் உத்தரவிட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony