முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

இந்தியாவுக்கு யுரேனியம் சப்ளை செய்யாதது குறித்து விளக்கம்

புதன்கிழமை, 20 ஜூலை 2011      இந்தியா
Image Unavailable

 

மெல்போர்ன்,ஜூலை.20 - இந்தியாவுக்கு யுரேனியம் சப்ளை செய்ய முடியாது என்ற ஆஸ்திரேலியாவின் நிலைப்பாடு காரணமாக இரு நாடுகளிடையிலான உறவு எந்த வகையிலும் பாதிக்கப்படாது என்று இந்தியாவுக்கான ஆஸ்திரேலிய தூதர் பீட்டர் வர்கீஸ் தெரிவித்துள்ளார். 

யுரேனியம் விற்பனையில் ஆஸ்திரேலியா எடுத்துள்ள நிலையானது அணு ஆயுத பரவல் தடை சட்டத்தை ஒட்டியதாகும். என்.பி.டி. எனப்படும் இந்த சட்டத்தை ஆதரிக்கும் வகையில் இத்தகைய நிலைப்பாட்டை ஆஸ்திரேலிய அரசு பின்பற்றி வருகிறது. இதனால் என்.பி.டியில் கையெழுத்திடாத இந்தியாவுக்கு யுரேனியம் சப்ளை செய்ய முடியாது என்ற முடிவை ஆஸ்திரேலியா எடுத்துள்ளது. இது எந்த வகையிலும் இந்தியாவுக்கு எதிரானது அல்ல. 

இருப்பினும் இந்தியாவுடனான உறவை வலுப்படுத்தும் நடவடிக்கைகளை ஆஸ்திரேலியா தொடர்ந்து மேற்கொள்ளலாம். ஏற்கனவே ஆஸ்திரேலியாவில் உள்ள இந்திய மாணவர்கள் தாக்கப்படுவதால் ஆஸ்திரேலியா சென்று படிக்கும் மாணவர்களின் விகிதம் கணிசமாக குறைந்து விட்டது. இந்நிலையில் யுரேனியம் சப்ளை செய்ய முடியாது என்ற ஆஸ்திரேலியாவின் நிலைப்பாட்டால் இரு நாடுகளிடையே உள்ள உறவில் விரிசல் ஏற்பட்டுள்ளது. ஆனால் அதை போக்கும் விதமாக தூதர் பீட்டர் வர்கீஸ் கருத்து அமைந்துள்ளது. 

இந்திய பெருங்கடல் பிராந்தியத்தில் இரு நாடுகளும் ஒருங்கிணைந்து செயல்பட ஒரு வாய்ப்பு கிடைத்துள்ளது. ஆ.ஓ.ஆர்.ஏ. பிரிவின் தலைவராக இந்தியாவும், துணை தலைவராக ஆஸ்திரேலியாவும் தேர்வு செய்யப்பட்டுள்ளதால் அடுத்த இரண்டு ஆண்டுகளுக்கு இப்பிராந்திய மேம்பாட்டுக்கு பாடுபட முடியும். அத்துடன் கிழக்கு ஆசிய கூட்டமைப்பில் அமெரிக்காவை தொடர்ந்து ரஷ்யாவும் சேர்ந்துள்ளது. முதல் முறையாக இந்த கூட்டமைப்பின் கல்வி துறை அமைச்சர்களின் மாநாட்டுக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது என்றார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony