முக்கிய செய்திகள்

அனைத்துலக எம்.ஜி.ஆர் மன்ற செயலாளர் நியமனம்

புதன்கிழமை, 20 ஜூலை 2011      தமிழகம்
Image Unavailable

 

சென்னை, ஜூலை.20 - அனைத்துலக எம்.ஜி.ஆர் மன்ற செயலாளராக கன்னியாகுமரி மாவட்டத்தை சேர்ந்த அ.தமிழ்மகன் உசேன் நேற்று முன்தினம் முதல் நியமிக்கப்பட்டுள்ளார் என்று ஜெயலலிதா அறிவித்துள்ளார். இதுகுறித்து அ.தி.மு.க. பொதுச் செயலாளரும், தமிழக முதல்வருமான ஜெயலலிதா அறிவிப்பில் கூறியிருப்பதாவது:-

கன்னியாகுமரி மாவட்ட எம்.ஜி.ஆர் மன்ற செயலாளர் பொறுப்பிலிருக்கும் அ.தமிழ்மகன் உசேன்  அப்பொறுப்பிலிருந்து விடுவிக்கப்படுகிறார்.

அ.தி.மு.க. அனைத்துலக எம்.ஜி.ஆர் மன்ற செயலாளர் பொறுப்பில் அ.தமிழ்மகன் உசேன் 18.7.11 முதல் நியமிக்கப்படுகிறார். கட்சியின் உடன்பிறப்புகள் இவருக்கு முழு ஒத்துழைப்பு நல்கிட கேட்டுக் கொள்கிறேன்.

இவ்வாறு முதல்வர் ஜெயலலிதா கூறியுள்ளார்.

இதை ஷேர் செய்திடுங்கள்: