முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

உஸ்பெஸ்கிஸ்தானில் பயங்கர நிலநடுக்கம்

வெள்ளிக்கிழமை, 22 ஜூலை 2011      உலகம்
Image Unavailable

 

பெர்கானா,ஜூலை.22 - ரஷ்யாவில் இருந்து பிரிந்து சென்ற நாடுகளில் ஒன்று உஸ்பெஸ்கிஸ்தான். இது ஆப்கானிஸ்தான் நாட்டையொட்டி உள்ளது. உஸ்பெஸ்கிஸ்தானில் உள்ள பெர்கானா நகரம் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் நேற்று அதிகாலை பயங்கர நிலநடுக்கம் ஏற்பட்டது. இதில் ஏராளமான வீடுகள் இடிந்து விழுந்தன. இவற்றில் சிக்கி 13 பேர் உயிரிழந்தனர். 88 பேர் படுகாயமடைந்தனர். பெர்கானா நகரில் இடிபாடுகளுக்குள் ஏராளமானோர் சிக்கி இருக்கலாம் என்று கருதப்படுகிறது. அங்கு மீட்பு பணிகள் நடைபெற்று வருகின்றன. எனவே பலி எண்ணிக்கை மேலும் உயரும் என்று கருதப்படுகிறது. உஸ்பெஸ்கிஸ்தான் அதிபர் இஸ்லாம் கரிமோவ் இது பற்றி கூறுகையில், நிலநடுக்கத்தின் பாதிப்பு அதிகமாக இருக்கும் என்று கருதுகிறோம். பாதிக்கப்பட்ட அனைத்து பகுதிகளுக்கும் அதிகாரிகள் குழுவை அனுப்பி உள்ளோம். பக்கத்து நாடான கிர்கிஸ்தான் உதவியையும் நாடியுள்ளோம். இது சக்தி வாய்ந்த நிலநடுக்கமாக உள்ளது. எனவே நிலைமை மோசமாக இருப்பதாகவே கருதுகிறோம் என்றார். 

இது போல பக்கத்து நாடான கிர்கிஸ்தான் நாட்டிலும் நிலநடுக்கம் ஏற்பட்டது. ஆனால் அங்கு பாதிப்புகள் ஏதும் ஏற்பட்டதாக இதுவரை தகவல் இல்லை. நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 6.1 ஆக இருந்தது. இதன் மைய பகுதி பூமிக்கு அடியில் 18 கிலோ மீட்டர் ஆழத்தில் இருந்தது. நிலநடுக்கம் 3 நிமிடம் நீடித்ததாக அதிகாரிகள் தெரிவித்தனர். கடந்த 2008 ம் ஆண்டு உஸ்பெஸ்கிஸ்தான் மற்றும் கிர்கிஸ்தான் நாட்டில் பயங்கர நிலநடுக்கம் ஏற்பட்டது. அப்போது 70 பேர் உயிரிழந்தது குறிப்பிடத்தக்கது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!