முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

தேசிய நெடுஞ்சாலைகளில் வரும் 9-ம் தேதி விவசாயிகள் மறியல்

வியாழக்கிழமை, 3 மார்ச் 2011      இந்தியா
Image Unavailable

 

மொகா,மார்ச் - 3 - உணவு தானியங்களுக்கு குறைந்தபட்ச ஆதரவு விலையை உயர்த்தக்கோரி வரும் 9-ம் தேதி தேசிய நெடுஞ்சாலைகளில் சாலை மறியலில் விவசாயிகள் ஈடுபடுவார்கள் என்று பாரத விவசாய சங்கம் அறிவித்துள்ளது. இந்த சாலை மறியல் போராட்டமானது வட பிராந்தியத்தில் டெல்லிக்கு செல்லும் தேசிய நெடுஞ்சாலைகளில் நடைபெறும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த சாலை மறியலின்போது கோதுமை, நெல் உற்பத்திக்கு செலவாகும் செலவு தொகையை கருத்தில் கொண்டு லாபகரமான வகையில் விலை உயர்வு வேண்டும். 

விவசாய நிலத்தை மாநில அரசு மற்றும் தனியாருக்கு கொடுக்கும்போது அரசு நிர்ணயிக்கும் விலை கொடுக்காமல் சந்தை விலை கொடுக்க வேண்டும் உள்பட பல்வேறு கோரிக்கைகளை விவசாயிகள் வலியுறுத்துவார்கள் என்று பாரத விவசாய சங்கத்தின் பஞ்சாப் மாநில கிளை தலைவர் அஜ்மீர் சிங் லோஹோவால் கூறினார். போராட்டத்தின்போது பஞ்சாப், அரியானா, உத்திரப்பிரதேசம், ராஜஸ்தான் ஆகிய மாநிலங்களில் இருந்து டெல்லிக்கு டெல்லிக்கு செல்லும் அனைத்து தேசிய நெடுஞ்சாலைகளிலும் வரும் 9-ம் தேதி விவசாயிகள் மறியலில் ஈடுபடுவார்கள். அதனால் அன்றைய நாளில் ஒருவர் கூட டெல்லிக்கு செல்ல முடியாது. விவசாயிகளின் கோரிக்கைகள் நிறைவேற்றப்படும் வரை காலவரையற்ற சாலை மறியல் போராட்டம் பாரத விவசாயிகள் சங்க தலைவர் திகாய்த் தலைமையில் நடைபெறும் என்றும் அஜ்மீர் மேலும் கூறினார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 6 days ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 6 days ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 1 month ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 1 month ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 3 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 3 months ago