மருத்துவ கல்லூரிகள் நன்கொடை வசூலித்தால் அபராதம்

Image Unavailable

 

புது டெல்லி,ஆக.7 - நாடாளுமன்ற நிலைக்குழுவின் கூட்டம் டெல்லியில் நடந்தது. இந்த கூட்டத்தில் இந்தியாவில் மருத்துவ கல்லூரிகள் மற்றும் என்ஜீனியரிங் கல்லூரிகளில் அதிக நன்கொடை பணம் வசூலிக்கப்படுகிறது. இதை தடுக்க அவ்வாறு செயல்படும் கல்லூரிகள் மீது மத்திய அரசு கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும். நன்கொடை பணம் வசூலிக்கும் கல்லூரிகளுக்கு அதிகபட்சம் ரூ. ஒரு கோடி வரை அபராதம் விதிக்கலாம் என்று முடிவு செய்யப்பட்டது. 

ஒவ்வொரு குறைபாடுகளுக்கும் குற்றங்களுக்கும் வித்தியாசம் கொண்ட அபராத தொகையை மத்திய அரசு முடிவு செய்து அறிவிக்க வேண்டும். பல்கலை கழக சட்டம் 2010 ன் படி குறைபாடுகள் உள்ள என்ஜீனியரிங் கல்வி நிறுவனங்கள், மருத்துவ கல்வி நிறுவனங்கள் மீது பாரபட்சமின்றி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் பாராளுமன்ற நிலைக்குழு கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டு இருக்கிறது. மருத்துவக் கல்லூரிகள் குறைவாக இருப்பதால்தான் மருத்துவ கல்லூரி இடங்களுக்கு அதிகமாக நன்கொடை பணம் வசூலிக்கப்படுகிறது. எனவே மருத்துவ கல்லூரிகளின் எண்ணிக்கையை அதிகப்படுத்த வேண்டும் என்றும் கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

வீடியோ